39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

நான்கு விருதுகளை தட்டி சென்ற அமீரகத்தின் தேசிய விமானமான எதிஹாட் ஏர்வேஸ்.!

ETIHAD AIRWAYS

அபுதாபி நவம்பர் 29, 2019 – ஓமானின் மஸ்கட்டில் உள்ள புகழ்பெற்ற ராயல் ஓபரா ஹவுஸில் நடைபெற்ற 26 ஆம் ஆண்டு உலக பயண விருதுகள் (WORLD TRAVEL AWARDS) என்னும் மாபெரும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நான்கு விருதுகள் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

உலகின் முன்னணி விமான நிறுவனம் 2019, உலகின் முன்னணி விமான நிறுவனம் – வாடிக்கையாளர் அனுபவம் 2019, உலகின் முன்னணி விமான சேவை – விமானத்தினுள் பொழுதுபோக்கு 2019 மற்றும் உலகின் முன்னணி நிறுவனம் – சிறப்பான சேவை 2019 என்னும் நான்கு பிரிவில் பரிசுகளை தட்டிச்சென்றது, எதிஹாட் ஏர்வேஸ்.

etihad airways awards

“நாங்கள் எங்கள் தயாரிப்புகளையும் பயணிகளின் அனுபவத்தையும் மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்கிறோம். அப்படி செய்வதால் தொழில்துறையின் மிக உயர்ந்த தரங்களை விமானத்திற்கு வழங்குவதற்கும், புதுமையான வழிகளை பயன்படுத்துவதற்கும் அது உறுதுணையாக உள்ளது. இந்த விருதுகள் உலகெங்கிலும் உள்ள பயண மற்றும் சுற்றுலா வல்லுநர்களால் வாக்களிக்கப்பட்டதாகும். மேலும் எத்திஹாட் குடும்பத்தின் சார்பாக, உலகம் முழுவதும் உள்ள எங்கள் கூட்டாளர்களுக்கும் விருந்தினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என எதிஹாட் ஏவியேஷன் குழுமத்தின் தலைமை வணிக அதிகாரி ராபின் கமார்க் கூறினார்.

etihad

இதுபற்றி உலக பயண விருதுகளின் (WORLD TRAVEL AWARDS) நிறுவனர் கிரஹாம் ஈ. குக் கூறுகையில், “விமானப் போக்குவரத்திற்கான உலகளாவிய சேவையை தொடர்கிறது, எதிஹாட் ஏர்வேஸ். அதன் வாடிக்கையாளர் சேவை, தொழில்நுட்பம் மற்றும் விமானத்தினுள் கிடைக்கும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அந்த நிறுவனம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. இது பயண வர்த்தகக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்”, என்கிறார்.

மஸ்கட்டில் நடந்த இந்த நிகழ்வில் தொழில் வல்லுநர்கள், பயண மற்றும் சுற்றுலாத் துறையின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!