UAE Tamil Web

துபாயில் நாளை நடக்கும் ஆட்சேர்ப்பு நிகழ்வு.. பிரபல Etihad நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – எப்படி Apply செய்வது?

பெருந்தொற்று நம்மை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து வரும் இந்த இனிய வேளையில் உலக அளவில் முடங்கி கிடந்த பல விஷயங்கள் மீண்டும் புத்துயிர் பெற துவங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக விமான சேவை நிறுவனங்கள் தற்போது முழுவீச்சில் செயல்பட துவங்கியுள்ளன.

இந்நிலையில் பிரபல Ethihad விமான சேவை நிறுவனம் பல காலியிடங்களுக்கு ஆட்களை பணியமர்த்தும் பணியில் தற்போது இறங்கியுள்ளது. எதிஹாட் ஏர்வேஸ், வரும் வாரத்தில் துபாயில் கேபின் Crew பணியாளர்களை நியமிக்கவுள்ளது.

வரும் ஜூன் 13 திங்கட்கிழமை முதல், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் துபாயில் உள்ள துசித் தானி ஹோட்டலில் தங்கள் Resumeகளை சமர்ப்பிக்கலாம் என்று UAEன் தேசிய கேரியர் Ethihad வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய ஏர்பஸ் A350கள் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு களமிறங்கவுள்ள நிலையில், எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது அதிக அளவிலான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில காலாண்டுகளில் மிக வேகமாக தனக்கு தேவையான புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர் Ethihad. தொற்றுநோய் காலத்தின்போது நீண்ட விடுப்பில் அனுப்பப்பட்ட சில ஊழியர்களை விமானத் துறை வேகமாக மீண்டும் பணியமர்த்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில் மட்டும் சுமார் 300 வேலைவாய்ப்புகளுக்காக தங்கள் இணையதளங்களில் பட்டியலிட்டுள்ளனர் Ethihad நிறுவனத்தினர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap