UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அபுதாபி வருபவர்களுக்கு 12 நாள் குவாரண்டைன் கட்டாயம்..!

ETIHAD

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அபுதாபி வரும் இந்தியர்கள் 12 நாட்கள் வீட்டிலேயே குவாரண்டைன் இருத்தல் வேண்டும். இந்தக் காலகட்டத்தில் கண்காணிப்பு சாதனத்தை அணிந்திருக்கவேண்டும். குவாரண்டைன் காலத்தில் 6 & 11 ஆம் நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும்.

இமிகிரேஷன் பணிகள் முடிவடைந்த பின்னர், இந்த கண்காணிப்பு சாதனம் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் என எதிஹாட் தெரிவித்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனமும் இதே விதிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETIHAD
6 Shares
Share via
Copy link