UAE Tamil Web

இந்தியா – அமீரகம் பறக்க விரைவில் விமான சேவையை தொடருவோம் – எதிஹாட் உறுதி!

கொரோனா பெருந்தொற்று பெரும் தலைவலியாக உள்ள நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் அமீரகம் திரும்ப முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர். நாளை முதல் அமீரகத்திற்குள் நுழைய ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் ரெட் லிஸ்ட் பட்டியலில் உள்ள இந்தியாவில் இருந்து விமான சேவையை தொங்க இருப்பதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதேபோன்று பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனமான எதிஹாட்டும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

Etihad Airways takes flight with sonic branding inspired by Emirati weavingஆகஸ்ட் 15ம் தேதி வரை விமான சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் ஒருசில கட்டுப்பாடுகளுடன் இந்தியா – அமீரகம் இடையிலான விமான போக்குவரத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்கள் சேவையை தொடரும் முயற்சியில் இறங்கியுள்ளனர். விமான சேவை தொடங்கியதும் அது குறித்த அறிவிப்பு இணையத்தில் வெளியிடப்படும் என எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தகவல் தொடர்பு மையத்தை அடிக்கடி அழைக்க வேண்டாம் எனவும் ஏதேனும் அவசர சேவை தேவைப்படும் பட்சத்தில் மட்டும் தொடர்பு கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு எதிஹாட் ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

 

4 Shares
Share via
Copy link
Powered by Social Snap