UAE Tamil Web

பெயர் மாறிய எதிசலாட் – புதுப்பெயர் என்ன தெரியுமா?

etisalat

அமீரகத்தின் நெட்வொர்க் சேவை வழங்கு நிறுவனமான எதிசலாட், எதிசலாட் தி ஃபாஸ்டஸ்ட் (Etisalat The Fastest) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

மொபைல் நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஆகியவற்றின் வேகங்களை கணக்கிடும் ஊக்லா நிறுவனம், உலகளவில் இந்த ஆண்டின் அதிவேக சேவை வழங்கும் நிறுவனமாக எதிசலாட்டை அறிவித்தது தான் இந்தப் பெயர் மாற்றத்திற்குக் காரணம்.

பல்வேறு பயனாளர்களின் இணைய பயன்பாட்டின் வேகத்தை பகுப்பாய்வு செய்து, உலகிலேயே அதிவேக நெட்வொர்க் ஆக எதிசலாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஊக்லா.

ஸ்பீட் ஸ்கோர் எனப்படும் வரையறையின் அடிப்படையில் ஒவ்வொரு நெட்வொர்க் சேவை வழங்கு நிறுவனங்களின் வேகமும் (டவுண்லோட் மற்றும் அப்லோட்) கணக்கில் கொள்ளப்பட்டு அதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

115.89 mbps டவுண்லோடு வேகத்தில் சேவைகளை வழங்கும் எதிசலாட்டின் ஒருங்கிணைந்த ஸ்பீட் ஸ்கோர் 98.78 mbps என ஊக்லா தெரிவித்திருக்கிறது. உலகளவில் ஸ்பீட் டெஸ்டில் 90 க்கு அதிமாக வேகம் கொண்டே ஒரே நெட்வொர்க் எதிசலாட் மட்டுமே.

உலகளவில் 2020 ஆம் ஆண்டின் Q1-Q2 (முதல் மற்றும் இரண்டாம் காலாண்டு) மற்றும் Q2-Q3 க்கான அதிவேக மொபைல் நெட்வொர்க்காக எதிசலாட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 2019 ஆம் ஆண்டின் Q3-Q4 க்கான அதிவேக பிராட்பேண்ட் நெட்வொர்க் என்ற பட்டத்தையும் எதிசாலாட் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.