UAE Tamil Web

அப்துல் கலாம் பிறந்தநாள், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ள எக்ஸ்போ 2020 இந்திய பெவிலியன்..!

indian pavilian

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தசரா என நீண்ட விடுமுறையை இந்தியர்கள் அனுபவித்து வருகிறார்கள். இதேநாளில் இந்தியர்களின் விருப்பத்திற்குரிய தலைவராக போற்றப்படும் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை சிறப்பிக்கும் விதமாக துபாய் எக்ஸ்போ 2020 ல் அமைக்கப்பட்டுள்ள இந்திய பெவிலியனில் இன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன. அவை பின்வருமாறு,

  • அதன்படி அதிகாலையை எப்படி புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வது என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
  • அப்துல் கலாமின் வாழ்க்கையை விளக்கும் நிகழ்ச்சி.
  • அப்துல் கலாம் தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அமீரகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் பேச இருக்கிறார்கள்.
  • நவராத்திரி, துர்கா பூஜை மற்றும் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் ஹெட் கியர் நடத்தும் யோகாசன பயிற்சி நேரலையாக நடத்தப்பட இருக்கிறது. பாலின் கச்சேரி (Baul Performance), லவ குஷா வின் யாக்ஷக்னா பகுதி, அமீரக கன்னட அமைப்பின் கலாச்சார நிகழ்ச்சிகள், எமிரேட்ஸ் பெங்கால் கிளப் மற்றும் அமீரக வாழ் பெங்காலி மக்களால் நாரி சக்தி எனப்படும் நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட இருக்கிறது.
  • வளைகுடா மகாராஷ்டிரா மக்கள் தொழில் கூட்டமைப்புப் பேரவை கலாச்சார நிகழ்ச்சியை நடத்துகிறது.

வாய்ப்பிருப்போர் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்குமாறு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

indian pavilian
1 Share
Share via
Copy link