UAE Tamil Web

50 மில்லியன் திர்ஹம்ஸ் வரையில் பரிசு: மஹ்சூஸ் டிராவில் கலந்துகொள்வது எப்படி? – உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் இதோ..!

Mahzooz-

ஒரு தண்ணீர் பாட்டில் உங்களது வாழ்க்கையை மாற்றும் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? மஹ்சூஸ் டிராவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால் நீங்களும் நம்புவீர்கள். முன்னதாக லோட்டோ டிரா என அழைக்கப்பட்ட இந்த டிரா இப்போது மஹ்சூஸ் என மறுஅவதாரம் எடுத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இந்தப் போட்டியின் குலுக்கல் நடைபெறும்.

இந்தக் குலுக்கலில் ஒரு தண்ணீர் பாட்டிலை சேவை அமைப்புகளுக்கு நீங்கள் நன்கொடையாக கொடுக்கவேண்டும். ஒரு பாட்டிலின் விலை 35 திர்ஹம்ஸ். இதன்மூலமாக டிராவில் கலந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். எத்தனை பாட்டிலை வாங்குகிறீர்களோ எத்தனை முறை நீங்கள் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். (எப்படி என்பதைப் பின்னால் சொல்கிறேன்)

இதில் எப்படி கலந்துகொள்வது? எப்படி விளையாடுவது? என உங்களிடம் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் கீழே பதிலளித்துள்ளோம். அதற்கு முன்னர், டிராவில் கலந்துகொள்ள நீங்கள் செய்யவேண்டியவை குறித்துப் பார்த்துவிடலாம்.

  • மஹ்சூஸ் இணையதளத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கைத் துவங்கவேண்டும். ஏற்கனவே கணக்கு இருந்தால் அதற்குள் நுழையவும்.
  • Play என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்னர் Buy Now என்பதைத் தொடவும்.
  • நீங்கள் நன்கொடையாக அளிக்கவிரும்பும் தண்ணீர் பாட்டில்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும். பின்னர் Add to Cart என்பதைத் தேர்ந்தெடுக்கவும். முன்பே கூறியதுபோல் ஒரு பாட்டிலின் விலை 35 திர்ஹம்ஸ். இப்போது நீங்கள் இதில் விளையாட தகுதியுடைவர் ஆவீர்கள்.
  • நீங்கள் ஒரு பாட்டிலை வாங்கியிருந்தால் ஒரு வரிசை திரையில் தோன்றும். அதில் 0 – 49 வரையிலான ஏதாவது ஆறு எண்களை நீங்கள் உள்ளீடு செய்தல் வேண்டும். ஒருவேளை நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாட்டில்களை வாங்கியிருந்தால் பாட்டில்களின் எண்ணிகையின் அளவிற்கு வரிசைகள் தோன்றும். ஒவ்வொன்றிலும் ஆறு எண்களை உள்ளிடும் வாய்ப்பு உங்களுகுக் கிடைக்கும்.
  • குலுக்கல் தேதியை நீங்கள் தேர்ந்தெடுத்த பின்னர் பாட்டிலுக்கு பணம் செலுத்தவேண்டும். உங்களது டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு வாயிலாகவோ அல்லது கிரெடிட் பேலன்ஸ் வாயிலாகவோ பணம் செலுத்தலாம். அப்படியில்லையெனில் Add to Cart மூலமாக உங்களுடைய கிரெடிட் பேலன்ஸ் வழியாக பணம் செலுத்தலாம். (இந்த கிரெடிட் பேலன்ஸ் சமாச்சாரம் குறித்து அடுத்த பத்திகளில் பார்ப்போம்)
  • உங்களது அக்கவுண்ட் மூலமாக போட்டியில் கலந்துகொள்வதற்கான உறுதி குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.
  • அதன்பின்னர் வாரந்தோறும் நடைபெறும் டிராவை நேரலையில் பார்த்து நீங்கள் தேர்ந்தெடுத்த எண்கள் குலுக்கலில் தேர்ந்தேடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவேண்டும்.
  • ஒருவேளை அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசி, பரிசுத்தொகையை நீங்கள் பெற்றுவிட்டால் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். உங்களது பரிசுத்தொகை குறித்தும் தான்.

கிரெடிட் பேலன்ஸ்

பாட்டில் வாங்க பணம் செலுத்தும் முறைகளில் ஒன்றுதான் இந்த கிரெடிட் பேலன்ஸ். கிட்டத்தட்ட வாலட் போன்றது. உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகவும் பாட்டிலை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இந்த கிரெடிட் பேலன்ஸ்–ல் பணத்தை சேர்ப்பது எப்படி. அதற்கு நீங்கள் கீழே உள்ள பாராவைப் படிக்கவேண்டும்.

  • உங்களுடைய மஹ்சூஸ் அக்கவுண்டிற்குள் சென்று, My Account என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர் Balance summary என்பதைத் தேர்ந்தெடுத்து Add Credit Balance என்பதைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் செலுத்தவிரும்பும் தொகையைக் குறிப்பிடவும்.
  • அதன்பின்னர் உங்களுடைய கார்டைப் பயன்படுத்தி பணத்தை கிரெடிட் பேலன்சிற்கு மாற்றிக்கொள்ளவும்.
  • இதற்கும் உங்களுக்கு மெசேஜ் வரும்.
  • அடுத்தமுறை விளையாடும் போது கிரெடிட் பேலன்ஸ் பணத்தைப் பயன்படுத்தி பாட்டிலை வாங்கலாம்.

முக்கியக் குறிப்பு: கிரெடிட் பேலன்சில் உள்ள பணம் திரும்பித் தரப்பட மாட்டாது. (Non-Refundable) 

பரிசுத் தொகை

எல்லாம் சரி, மொத்தப் பரிசுத் தொகை எவ்வளவு? எப்படி நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? என்ற கேள்வி இந்நேரம் தோன்றியிருக்க வேண்டுமே? நல்லது. அப்படியே கீழே நகருங்கள்.

  • நீங்கள் ஆறு எண்கள் தேர்ந்தெடுப்பீர்கள் இல்லையா? அதேநேரம் டிஜிட்டல் மூலமாக நடத்தப்படும் குலுக்கலில் ஆறு எண்கள் தனியாக தேர்ந்தெடுக்கப்படும். ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட ஆறு எண்ணும், குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எண்ணும் ஒன்றாக இருந்தால் 50 மில்லியன் பரிசு உங்களுக்கு. ஒருவேளை உங்களைப்போன்றே கூடுதலாக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
  • ஒருவேளை குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எண்களில் உங்களுடைய 5 எண்கள் மட்டும் ஒத்துப்போனால் 1 மில்லியன் பரிசுத்தொகை கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
  • இதுவே 4 எண்கள் என்றால் 1000 திர்ஹம்ஸ் பரிசு அளிக்கப்படும். 4 எண்களை சரியாக பொருத்தியவர்கள் அனைவருக்கும் தலா 1000 திர்ஹம்ஸ் கொடுக்கப்படும்.
  • 3 எண்கள் தான் பொருந்தியது என்றால் 35 திர்ஹம்ஸ் பரிசாக வழங்கப்படும்.

பரிசைப் பெறுதல்

உங்களுக்கு பரிசு கிடைத்துவிட்டது. எப்படி அந்தப் பணத்தைப் பெறுவது? என்பது குறித்துப் பார்க்கலாம்.

  • மஹ்சூஸ் இணையதளத்தில் உங்களுடைய அக்கவுண்டிற்குள் செல்லவும்.
  • My Account ற்குச் சென்று, Balance Summary/Total Balance என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கும். ஒன்று Transfer மற்றொன்று Withdraw.
  • கிரெடிட் பேலன்சிற்கு டிரான்ஸ்பர் கொடுத்தால் உங்களுடைய மொத்த பரிசுத்தொகையும் கிரெடிட் பேலன்சிற்குச் சென்றுவிடும். இவ்வாறு செய்தால் மில்லியன் கணக்கான பணத்தைக்கொண்டு தண்ணீர் பாட்டில் மட்டுமே வாங்கமுடியும். ஏனெனில் கிரெடிட் பேலன்ஸ்-ல் இருக்கும் பணம் திரும்பித் தரப்படமாட்டாது என முந்தைய பாராவிலேயே பார்த்தோம் அல்லவா? அதுதான் கதை.
  • ஆகவே, Withdraw கொடுக்கவும். அதன்பிறகு உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
  • இது தொடர்பாக உங்களுக்கு ஒரு உறுதி குறுஞ்செய்தி வரும்.

ஒருவேளை 90 நாட்களுக்குள் நீங்கள் பணத்தை எடுக்காவிடில் நேரடியாக கிரெடிட் பேலன்ஸ்-ற்கு பணம் சென்றுவிடும். ஆகவே கவனம் தேவை.

அமீரக வங்கிக்கணக்கிற்கு உங்களுடைய பரிசுத்தொகையில் இருந்து 300 திர்ஹம்ஸ்க்கும் குறைவாக நீங்கள் வித்டிரா செய்தால், 10 திர்ஹம்ஸ் பிடித்தம் செய்யப்படும். இதுவே வெளிநாட்டு வங்கிக்கணக்கு என்றால் 20 திர்ஹம்ஸ் பிடித்தம் செய்யப்படும். 300 திர்ஹம்ஸ்க்கு மேலே என்றால் எவ்வித பிடித்தமும் கிடையாது.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

குறிப்பிட்ட சில பிரிவினருக்கு இந்த டிராவில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.

  • 18 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடையவர்களுக்கு அனுமதி கிடையாது.
  • நீங்கள் வசிக்கும் இடத்தில் (நாட்டில்) உள்ள சட்டத்தின்படி இந்த குலுக்கலில் கலந்துகொள்வது குற்றம் எனில் உங்களுக்கு அனுமதி கிடையாது.
  • மஹ்சூஸ் டிராவின் மேனேஜர், மேனேஜரின் பணியாளர்கள், டிராவின் பங்குதாரர்கள் இதில் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இன்சூரன்ஸ் பிரதிநிதியாகவோ, டிரா மேனேஜர் அல்லது அரசுப் பிரதிநிதியாகவோ இருந்தால் இதில் பங்குபெற இயலாது.
  • மூன்றாம் ஆலோசகராகவோ (Third Party Consultant) அல்லது இன்சூரன்ஸ்-காக மேனேஜரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர், பாதுகாப்பு அல்லது கணக்குத் தணிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் அல்லது மேலே குறிப்பிட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இந்த டிராவில் பங்குபெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அமீரக அரசால் ஏற்றுமதி/இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்டுள்ள நாடுகள் மற்றும் பொதுவாக தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் உள்ளோர் இதில் பங்கேற்க முடியாது..

இந்த டிராவில் இணைந்துள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகள்

  • எமிரேட்ஸ் ரெட் கிரெசன்ட் (Emirates Red Crescent)
  • சென்சஸ் (Senses)
  • மன்ஸில் (Manzil)
  • ஸ்மார்ட் லைஃப் (Smart Life)

நீங்கள் வாங்கும் தண்ணீர் கேன்கள் மேற்கண்ட அமைப்புகளின் மூலமாக கஷ்டத்தில் தவிர்பவர்களுக்கு வழங்கப்படும். இதுவரையில் தண்ணீர் கேன்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் உள்ளது. விரைவில் மற்ற பொருட்களையும் கொடையாக அளிக்க வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

மஹ்சூஸ் டிராவின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. போலவே மஹ்சூஸ் டிராவின் இணையதளம் மூலமாகவும் நீங்கள் டிராவில் பங்கேற்க முடியும்.

நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் போட்டியில் பங்கேற்கலாம். ஆனால் பரிசுத்தொகை அமீரக சட்டப்படி, அமீரக வங்கிக்கணக்கு ஒன்றிற்கே மாற்றப்படும்.

தொடர்புக்கு

அமீரகத்தில் வசிப்பவர்கள்: 800-5825

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் : +971-4-571-3410