துபாய் விமான நிலையத்தில் உணவுப் பையில் போதைப்பொருட்களுடன் சிக்கிய வெளிநாட்டவருக்கு அபராதம்..!!

Expat caught with drugs in food bag at Dubai airport. ( Photo : Khaleej Times)

துபாயில் எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் 38 வயது நிரம்பிய கேமரூன் நாட்டவர், கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிடிபட்டார். அவருக்கு நீதிமன்றம் 5,000 திரகம் அபராதம் முதலில் செலுத்த உத்தரவிட்டது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சுங்க ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில், உணவுப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டிராமடோல் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமீரக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து மேல் விசாரனைக்காக அவர் போதைப்பொருள் தடுப்பு பொது இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

துபாய் போலீஸாரின் குற்ற ஆய்வக அறிக்கையின் படி, குற்றவாளியிடமிருந்து சுமார் 765 டிராமடோல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Khaleej Times

Loading...