UAE Tamil Web

தலைகீழாக யோகாசனம் – சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய பெண்!

துபாயில் யோகா ஆசிரியராக பணியாற்றி வரும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாக்யா புட்டலிங்கப்பா கொரோனா ஊரடங்கிலும் சாதனை படைத்து அசத்தியிருக்கிறார். 8 வயது முதலே யோகாவில் அதீத ஆர்வம் கொண்ட பாக்யா, கொரோனா ஊரடங்கின்போது பள்ளிக்கூடம் செல்ல இயலாததால் வீட்டிலேயே யோகா பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிர்சாசனா எனும் தலைகீழாக நின்று யோகா செய்யும் முறையை 1 நிமிடம் 7 விநாடிகள் வரை நாற்காழியிலேயே செய்து பிரமிக்க வைத்துள்ளார். கடினமான யோகா முறையை அசால்ட்டாக செய்து முடித்த இந்திய பெண்ணுக்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மட்டுமின்றி கனடா புக் ஆஃப் ரெக்கார்ட்சும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிக நேரம் தலைகீழாக நின்று யோகா செய்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள பாக்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நடைபெற்ற பன்னாட்டு யோகா போட்டிகளிலும் பாக்யா பல சாதனைகளை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link