UAE Tamil Web

இந்திய வெளிநாட்டவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் அமீரக உள்ளூர் முகவரியை சேர்க்கலாம்.! இந்திய துணைத் தூதரகம்

passport

தாய்நாட்டை விட்டு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில், அமீரக உள்ளூர் முகவரியை சேர்த்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தூதரகம் மற்றும் பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு பிரிவு அதிகாரி சித்தார்த்த குமார் இது பற்றி கூறுகையில்,”அமீரகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள், வெளிநாட்டிலுள்ள உள்ளூர் முகவரியை தங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் சேர்க்க விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisment -

அமீரகத்தில் நீண்ட காலமாக தங்கியிருக்கும் பலருக்கு இந்தியாவில் சரியான முகவரி இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அப்படிப்பட்ட இந்திய குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட்களில் உள்ளூர் அமீரக முகவரியை சேர்த்து கொள்ளலாம். வாடகைக்கு அல்லது சுய சொந்தமான தங்குமிடங்களில் வசிக்கும் இந்திய வெளிநாட்டினரால் இந்த வசதியைப் பெற முடியும்.

தங்களது அமீரக முகவரியை சேர்க்க விரும்புவோர் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் வசிப்பிட ஆதாரமாக சில ஆவணங்களை வழங்க வேண்டும். மின் கட்டண ரசீது, குடிநீர் ரசீது, வாடகை ஒப்பந்தம்(DEWA/ FEWA and SEWA bills) உள்ளிட்ட ஆவணங்கள் அமீரகத்தில் வசிப்பதற்கான சான்றாக ஏற்று கொள்ளப்படும்.

இந்தியாவில் நிரந்தர அல்லது செல்லுபடியாகும் முகவரிகள் இல்லாதவர்களுக்கு உதவ இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் அமீரக முகவரி இடம் பெற வேண்டும் என்று விரும்புவோர் அதனை தற்போது இருக்கும் பாஸ்போர்ட்டில் சேர்க்க முடியாது. இதற்காக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பேசிய அவர் தாம் சொல்லும் இந்த செயல்முறை சுமார் ஒரு வருடமாக நடைமுறையில் உள்ளது.

இதற்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் பலர் உள்ளனர். தங்களது பாஸ்போர்ட்டில் அமீரக முகவரியை சேர்க்க விரும்பும் மக்களிடமிருந்து குறைந்தபட்சம் தினமும் 11-12 விண்ணப்பங்களை பெறுவதாக சித்தார்த்த குமார் குறிப்பிட்டுள்ளார். சரியான முகவரி இல்லாத இந்தியர்களை இந்தியாவிலோ அல்லது அமீரகத்திலோ தங்கள் முகவரியை மாற்ற ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.

விண்ணப்பதாரர்கள் சுய-சொந்த முகவரி(self-owned address) அல்லது வாடகை முகவரி(rental address) என இரண்டில் எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால் 2 முகவரிகளில் ஒன்றை மட்டுமே பாஸ்போர்ட்டில் சேர்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.