39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

இந்தியர்கள் அமீரகம் திரும்ப சிறப்பு விமான சேவை – இந்திய அரசு அறிவிப்பு!

flight to uae

அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் முன் திட்டமிடப்படாத விமானங்களின் வாயிலாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என இந்திய விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தாயகம் திரும்பும் பயணிகள் அனைவரும் கட்டாயம் தாங்கள் செல்ல விரும்பும் நாட்டின் குடிமக்களாகவோ, குறைந்த பட்சம் ஒரு வருடம் மட்டுமே ஆகியுள்ள (தற்காலிக) ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவராகவோ, அந்நாட்டினுடைய கிரீன் கார்டு அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான (OCI) அட்டை வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம் என இந்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஞாயிறன்று தெரிவித்துள்ளது.

மருத்துவ நெருக்கடி அல்லது குடும்ப உறுப்பினர்களின் மரணம் காரணமாக பயணிக்க விரும்பும், ஆறு மாத விசா வைத்திருக்கும் இந்தியர்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர். தாய்நாடு செல்ல விழையும் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள், தத்தம் நாடுகளுக்கு பயணிக்க உதவும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை (standard operation procedure) இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்ப் பரவுதலைத் தடுக்கும் விதமாக மார்ச் 21 ஆம் தேதி முதல் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த மூன்று வாரங்களாக செயல்பட்டு வரும் வந்தே பாரத் மிஷனைத் தொடர்ந்து கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து துறை நியமித்துள்ள ஏஜென்சி பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச பயணிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் :

பிராயாணத்திற்கு தயாராக உள்ள பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை அல்லது அதனால் நியமிக்கப்பட்ட முகவர்களிடம் தாங்கள் புறப்படும், சேரும் இடம் மற்றும் போதுமான தகவல்களை அளிக்க வேண்டும்.

மக்கள் தாங்கள் செல்ல விரும்பும் நாட்டின் குடிமக்களாகவோ அந்நாட்டின் கிரீன் கார்டு அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டை வைத்திருப்பவராகவோ, தாம் செல்ல விரும்பும் நாட்டின் தற்காலிக விசா வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம்.

ஆறு மாத காலத்துக்கு செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் இந்தியர்கள், மருத்துவ நெருக்கடி அல்லது குடும்ப உறுப்பினர்களின் மரணம் காரணமாக பயணிக்க விரும்புவர்களும் அனுமதிக்கப்படுவர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அனுமதித்த விமானங்கள் மூலம் மட்டுமே இந்தியாவிலிருந்து வெளியேறும் பயணங்கள் அனுமதிக்கப்படும்.

இந்தியாவைச் சேர்ந்த கடற்தொழில் குழுக்கள் அல்லது நபர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்கவேண்டும். மேலும் அவர்கள் இந்தியாவின் வந்தே பாரத் மிஷன் மூலம் இயங்கும் அல்லது அவர்களின் நிறுவனம் நியமித்த விமானங்கள் (மத்திய அரசின் அனுமதி பெற்ற) மூலமே பயணம் மேற்கொள்ள முடியும். இதற்கான முன் அனுமதியை அவர்கள் கப்பல் துறை அமைச்சகத்திடம் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளுக்கான டிக்கெட்டுகளை வழங்கும் முன்னர் அவர்கள் செல்லும் நாடு அவர்களின் வருகையை ஏற்றுக்கொள்கிறதா என்று விமானப் போக்குவரத்துத் துறை உறுதி செய்துகொள்ளும். மேற்படி நாடானது விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட பயணிகள் கட்டுப்பட்டவர்களாவர்.

விமானங்கள் வகுத்துள்ள கட்டணம் அந்தந்த பயணிகளைச் சார்ந்தது.

விமானத்திற்குள் அனுமதிக்கப்படும் முன்பு பயணிகள் அனைவரும் மருத்துவ நெறிமுறைகளின்படி வெப்ப பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவர். அறிகுறியற்ற நபர்களே பயணத்திற்கு அனுமதியளிக்கப்பெறுவர்.

பயணத்தின் போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடி அணிதல், சுகாதாரம், கைகளின் தூய்மை, சுவாசத்தூய்மை ஆகியவற்றை விமானப் பணியாளர்கள், விமானக் குழு மற்றும் பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இதையும் படிங்க.!