UAE Tamil Web

2021 ஆம் ஆண்டிற்கான ரமலான், ஈத் அல் பித்ர், ஈத் அல் அத்ஹா வரும் நாட்கள் கணிக்கப்பட்டன..!

Al-Noor-mosque-at-Sharjah-Buhairah-Corniche

2021 ஆம் ஆண்டிற்கான ரமலான் மாத துவக்கம், ஈத் அல் பித்ர் மற்றும் ஈத் அல் அத்ஹா பண்டிகை நாட்களை கணித்துள்ளார் ஷார்ஜாவைச் சேர்ந்த வானியல் ஆய்வாளரான இப்ராஹீம் அல் ஜர்வான்.

- Advertisment -

வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினரான அல் ஜர்வான் ஷார்ஜா கோளரங்கத்தின் தலைவராவார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021, ஏப்ரல் 12 (திங்கட்கிழமை) மாலை 6.31 மணிக்கு ரமலான் பிறை தோன்றும். சில வானியல் காரணங்களால் அடுத்தநாள் அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதி மாலை நம்மால் பிறையைப் பார்க்க முடியும். இது ரமலான் மாதம் துவங்குவதை உறுதிசெய்யும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மார்ச் 21 முதல் ஜூன் 21 ஆம் தேதிவரையில் வானிலை சீராக இருக்கும். இது வசந்தகாலம் எனப்படும். எனவே வரவிருக்கும் ரமலான் மாதம் மிதமான வெப்பநிலையை கொண்டிருக்கும்” என ஜர்வான் தெரிவித்தார்.

ஈத் அல் பித்ர்

ஷவ்வால் மாதத்தில் பிறையானது மே 11, 2021 அன்று தோன்றினாலும் நம்மால் மே 13 (வியாழக்கிழமை) அன்றே பிறையைப் பார்க்க முடியும். இது ஈத் அல் பித்ர் -ன் முதல் நாளாக கொண்டாடப்படுகிறது.

ரமலான் முடிவடைவதைக் குறிக்கும் நாளான ஈத் அல் பித்ர் -க்கு அமீரகத்தின் பொது மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும்.

ஈத் அல் அத்ஹா

து அல் ஹிஜ்ஜா மாத பிறை ஜூலை 10 அன்று தோன்றும் எனவும், து அல் ஹிஜ்ஜாவின் முதல் நாள் ஜூலை 11 அன்று அமையும் எனவும் ஜர்வான் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டிற்கான ஈத் அல் அத்ஹா ஜூலை 20 (செவ்வாய்க்கிழமை) அன்று கொண்டாடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

து அல் ஹிஜ்ஜா மாதத்தின் 9 ஆம் நாள் அராபத் தினமாகவும், 10 வது நாள் ஈத் அல் அத்ஹா பெருநாளாகவும் கொண்டாடப்படுவது இஸ்லாமிய வழக்கமாகும்.