UAE Tamil Web

இன்னும் EXPO துபாய்க்கு போகவில்லையா..? அதிரடி சலுகையை அறிவித்த EXPO 2020!

expo 2020

துபாயில் 2021 அக்டோபர் தொடங்கிய Expo 2020 வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில் நுழைவு கட்டணத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Expo 2020-இல் ஒரு நபருக்கான நுழைவு கட்டணம் 95 திர்ஹம்ஸ் ஆக இருந்தது. பின்னர் Expo முடிவடைய இருப்பதால் நுழைவு கட்டணம் 45 திர்ஹம்ஸாக குறைக்கப்பட்டது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த சலுகை கட்டணம் பொருந்தும்.

இந்நிலையில் தற்போது தெரிவித்துள்ள அறிவிப்பில், “சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 18 முதல் 59 வயதிற்குட்பட்டோரர் 45 திர்ஹம்ஸ் நுழைவு கட்டணம் செலுத்தி Expo கண்டு ரசிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Expo 2020 டிக்கெட் வைத்திருப்போர் வரிசையில் காத்திருக்காமல் விரும்பிய நாட்டு பவிலியங்களுக்கு சென்று பார்வையிடலாம். முன்னதாக அமலில் இருக்கும் ஸ்மார்ட் வரிசையில் 10 முன்பதிவுகளை செய்துகொள்ளலாம் என்றும் Expo குழு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் அன்று தொடங்கி பிப்ரவரி 1 வரை Expo 2020-ஐ பார்வையிட்டோர்களின் எண்ணிக்கை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

expo 2020
13 Shares
Share via
Copy link