UAE Tamil Web

“துபாய் நம்பிக்கையின் நகரம்” – எக்ஸ்போ சிட்டியைப் பார்த்து பிரம்மித்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்..!

AR Rahman

துபாய் எக்ஸ்போ 2020 ன் துவக்க விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அதில் பலராலும் எதிர்பார்க்கப்படுவது ஃபிர்தௌஸ் ஆர்கெஸ்ட்ரா (Firdaus Orchestra). ஏனென்றால் இந்தியாவின் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் தான் இதனை ஒருங்கிணைக்க இருக்கிறார்.

இந்த இசை நிகழ்ச்சியில் 23 நாடுகளைச் சேர்ந்த 50 பெண்கள் பங்கேற்கின்றனர். வெவ்வேறு இசைப்பின்புலத்தைக் கொண்ட இவர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்க இருக்கிறார் ரஹ்மான்.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரஹ்மான் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது,” மத்திய கிழக்கு என்றவுடனேயே பலருக்கும் பலருக்கும் தவறான புரிதல் வந்துவிடுகிறது. அங்குள்ள பெண்கள் வேறுமாதிரியானவர்கள், அவர்களால் இசைக்கருவிகளை இசைக்க முடியாது என நினைக்கின்றனர். ஆனால் துபாய் அப்படியல்ல. இது நம்பிக்கையின் தேசம். இங்கே எல்லாம் சாத்தியம் தான். சாதிக்க முடியாதது ஏதுமில்லை. நம்மால் வளர்ச்சியடைய முடியும் என்ற எண்ணத்தை துபாய் அளிக்கிறது” என்றார்.

“ஓமான், சிரியா, ஈராக், லெபனான், குரோஷியா, ஆர்மீனியா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் துபாயில் சங்கமிக்கின்றனர். சகோதரத்துவத்துடன் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ்கின்றனர். தங்களுக்கு புரியாதவற்றை நினைத்து மக்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே அவர்கள் இசைபோன்ற அழகான விஷயத்தை உருவாக்க முன்வருகிறார்கள். அவர்கள் புதிய சாதனையைப் படைக்கக் காத்திருக்கிறார்கள்” என்றார்.

கடந்த 2 வருடங்களாக துபாய் எக்ஸ்போ கட்டுமானப் பணிகளை பார்த்துவருவதாகவும் அதன் பிரம்மாண்ட கட்டமைப்பைப் பார்த்து வியந்ததாகவும் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றிப் பேசுகையில்,” கொரோனா சூழ்நிலையிலும் இடைவிடாது மேற்கொண்ட பணிகளின் விளைவாக இது சாத்தியமாகியிருக்கிறது” என்றார்.

ஃபிர்தௌஸ் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியானது எக்ஸ்போ நடைபெறும் 6 மாத காலத்தில் மொத்தம் 10 முறை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AR Rahman
2 Shares
Share via
Copy link