துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷனில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான குர் ஆனை தங்கத்தில் வடிவமைக்க இருப்பதாக புகழ்பெற்ற கலை வல்லுநர் ஷாஹித் ரசம் அறிவித்துள்ளார். இதன் முன்னோட்டமாக சூரா அர் ரஹ்மான் பகுதியை மட்டும் தங்கத்தால் வடிவமைத்து துபாய் கண்காட்சியில் காட்சி வைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய குர் ஆனை வடிவமைக்க 200 கலைஞர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற இருப்பதாகவும் இதற்கு 5 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 200 கிலோ தங்கம், 2 டன் அலுமினியம் கொண்டு 80,000 வார்த்தைகளுடன் 550 பக்கங்களில் இந்த குர் ஆன் வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் உலகின் மிகப்பெரிய குர்ஆனை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலைஞர் தலைமையில் வடிவமைக்கப்பட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு தரப்பினர் இடையே விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது
