UAE Tamil Web

Expo2020ல் களமிறங்கும் ரோபோக்கள்!

கொரோனா பேரிடர் இன்னுமே முடிவுக்கு வராத நிலையில் அக்டோபரில் Expo2020 பிரமாண்ட கண்காட்சி துபாயில் தொடங்க உள்ளது. 6 மாதங்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 25 மில்லியன் பார்வையாளர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக கண்காட்சி குழு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் உடல்நலனை பாதுகாக்கவும் Expo2020 கண்காட்சியில் ரோபோக்கள் களமிறங்க உள்ளன. AI தொழில்நுட்பங்களுடன் கூடிய தானியங்கி ரோபோக்கள் தனி மனித இடைவெளி மக்கள் மத்தியில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சோதனை செய்யும். வரிசைகளை சரி செய்வது, சானிடைசர் வழங்குவது, உடல்வெப்பநிலையை பரிசோதிப்பது, கொரோனா விழிப்புணர்வு, அவசர முதலுதவிக்கு உதவுவது என கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு ரோபோக்கள் பெரிதும் துணையாக இருக்கும். கொரோனா பரவல் நீடிக்கும் சூழலில் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரோபோக்கள் பெரிதும் உதவும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1 Share
Share via
Copy link