UAE Tamil Web

வீட்டுவேலை செய்பவர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பாளர்களுக்கு இலவச எக்ஸ்போ டிக்கெட்..!

Expo 2020 Dubai Falcon Pavilion

துபாய் எக்ஸ்போ 2020 ன் ஒருங்கிணைப்பாளர்கள் இன்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதன்படி வீட்டுவேலை செய்பவர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு எக்ஸ்போ 2020 டிக்கெட்டை இலவசமாக வழங்க இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேற்கூறிய பணியாளர்கள் தங்களது ரெசிடென்சி விசா மற்றும் தங்களது வேலையின் பெயரை தகுந்த ஆவணங்களுடன் எக்ஸ்போ டிக்கெட் பூத்தில் காட்டினால் போதும். அவர்களுக்கு அனுமதியானது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் இத்தனை பெரிய திடலை சுற்றிப்பார்ப்பது சிரமமான காரியம் என்றும், இப்புதிய அறிவிப்பால் குழந்தை பராமரிப்பாளர்களை எளிதில் அழைத்து வரலாம் என பல்வேறு மக்கள் இந்த அறிவிப்பிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

Expo 2020 Dubai Falcon Pavilion
3 Shares
Share via
Copy link