துபாயில் நடைபெற்றுவரும் பிரம்மாண்ட எக்ஸ்போ 2020 கண்காட்சியைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் அமீரகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் அமீரக ஊழியர்களுக்கு எக்ஸ்போ 2020 ஐக் காணும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் வகையில் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளை அமீரக ஆட்சியாளர்கள் அறிவித்துவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக உச்ச சபையின் உறுப்பினரும் புஜைராவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷார்கி புஜைரா அரசுப் பணியாளர்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பினை அளித்துள்ளார்.
இதன்மூலம் ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் எக்ஸ்போவைப் பார்வையிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
