எதிர்காலத்திற்கு அழைத்து செல்லும் எக்ஸ்போ 2020 துபாயின் நுழைவு வாயில்கள்.!

February 12 2020- எக்ஸ்போ 2020 துபாய் துவங்க இன்னும் 249 நாட்கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவேற்கும் மூன்று எக்ஸ்போ நுழைவு வாயில்கள் (Entry Portals) தற்போது மக்களின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறந்த பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஆசிப் கான் மற்றும் அவரது ஸ்டுடியோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த நுழைவு வாயில்கள், பாரம்பரிய மஷ்ரபியாவின் எதிர்கால தழுவலான (futuristic adaptation of the traditional mashrabiya) குறிப்பிட்ட பகுதியில் ஒளி மற்றும் காற்றோட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகும்.

Expo 2020 entry portals

எக்ஸ்போ 2020 துபாயின் தலைமை மேம்பாட்டு மற்றும் விநியோக அலுவலர் அகமது அல் காதிப் கூறுகையில், “2020 அக்டோபர் 20 ஆம் தேதி உலகிற்கு எங்கள் கதவுகளைத் திறக்க நாங்கள் காத்து கொண்டு இருக்கின்றோம். மேலும் எக்ஸ்போ நுழைவு வாயில்கள் மில்லியன் கணக்கான மக்களை வரவேற்க ஒரு அருமையான வழியை வழங்கும். உலகத்தின் மிகச்சிறந்த நிகழ்ச்சிக்கு நுழையும் போதே அற்புதமான கட்டிடக்கலை மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளின் முதல் சுவையை அவர்கள் அனுபவிப்பார்கள்” என்கிறார்.

நுழைவாயில்களின் கட்டமைப்பு:

இந்த குறிப்பிடத்தக்க போர்ட்டல்கள் முற்றிலும் அதி-இலகுரக கார்பன்-ஃபைபர் கலவையின் இழைகளிலிருந்து நெய்யப்படுகின்றன, அவை நம்பமுடியாத அளவு வலிமையைக் கட்டமைப்பிற்கு கொடுக்கின்றன. இது ஆறு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் உயரத்தை விட 21 மீட்டர் உயரமும் மற்றும் 30 மீட்டர் நீளமும் கொண்டுள்ளது. மேலும் கூடுதல் ஆதரவு எதுவும் இல்லாமல் நிற்கும் வலிமை மிகுந்தது.

ஒவ்வொரு நுழைவிலும் 21 மீட்டர் உயரமும் 10.5 மீட்டர் அகலமும் கொண்ட இரண்டு பரந்த கதவுகள் உள்ளன. அவை எக்ஸ்போ 2020-ன் 173 நாட்களில் தினமும் காலையில் திறக்கப்படும். இந்த சிக்கலான கட்டமைப்புகள் உருவாக்க மூன்று வருடங்கள் எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

expo 2020 entry gate

எக்ஸ்போ நுழைவு வாயில்கள் தனது சிறந்த படைப்பாக விவரித்த எக்ஸ்போ 2020 துபாயின் பொது சாம்ராஜ்யத்தின் (Public Realm) கட்டிடக் கலைஞர் ஆசிப் கான், “எக்ஸ்போ தளத்தை அணுகும்போது நீங்கள் பார்க்கும் முதல் விஷயம் இந்த போர்ட்டல்கள் தான். எனவே அவை உங்கள் பயணத்தின் ஆரம்பத்திலும் மற்றும் பயணத்தின் முடிவிலும் ஒரு சிறந்த அடையாளமாக இருக்கின்றன. எக்ஸ்போவிற்கு வருபவர்கள், குறிப்பாக குழந்தைகள், அவர்கள் இதுவரை பார்த்திராத கட்டிடக்கலை மூலம் ஈர்க்கப்பட வேண்டும். மேலும் இது இந்த பகுதியின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று உற்சாகமாக அவர்கள் அனுபவித்து மகிழ நான் விரும்புகிறேன்” என்றார்.

மேலும் “இந்த கதவுகளை கடந்து செல்வது, உடல் மற்றும் மன ரீதியாக கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு நகரும் ஒரு அனுபவத்தை அளிக்கும் என நம்புகின்றேன்” என்றார் அவர்.

Loading...