அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு சென்று மீண்டும் அமீரகம் திரும்பும் இருவழி விமான டிக்கெட்டை இலவசமாக வழங்க இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. எப்படி? பார்க்கலாம்.
துபாய் எக்ஸ்போ பெவிலியனில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஒரு குலுக்கலை நடத்த இருக்கிறது. ஒவ்வொரு குலுக்களிலும் தலா இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இருவழி விமான டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்கள் இந்தியாவின் 15 நகரங்களில் எதற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் நடைபெறும் தேதிகள் : டிசம்பர் 2, ஜனவரி 1, பிப்ரவரி 1.
#FlyWithIX: Fly by Air India Express
Visit the India Pavilion at Expo 2020.
Stand a chance to win free round trip ticket to any Air India Express destination of your choice.@cgidubai @IndembAbuDhabi @MoCA_GoI @JM_Scindia pic.twitter.com/idskjbJHIl
— Air India Express (@FlyWithIX) November 8, 2021
விதிமுறைகள்
- குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் என அனைவரும் இந்திய பெவிலியனில் அமைந்துள்ள ஏர் இந்தியா கியோஸ்கில் நடைபெறும் (Air India kiosk) இந்தக் குலுக்கலில் கலந்துகொள்ளலாம்.
- பங்கேற்பவர் கடைசியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலமாக பயணித்திருக்க வேண்டும்.
- டிரா நடைபெறும்போது அந்த போர்டிங் பாஸைக் காண்பிக்க வேண்டும்.
- வழங்கப்படும் விமான டிக்கெட் மாற்றத்தக்கதல்ல.
- விமான சேவை வரியை பயணியே ஏற்கவேண்டும்.
- ஆகஸ்டு 31, 2022 ஆம் தேதிவரையில் இந்த டிக்கெட் செல்லுபடியாகும்.
- விமான போக்குவரத்து அதிக பிசியான நேரத்தில் பயணியால் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாது.
