UAE Tamil Web

துபாய் எக்ஸ்போ: 28 நாள் ; 1.5 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த இந்திய பெவிலியன்..!

india pavilion

துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் எக்ஸ்போ 2020 ல் சுமார் 192 நாடுகள் தங்களது பெவிலியனை அமைத்திருக்கின்றன. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த கண்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், அரசியல் தலைவர்கள், ராஜாங்க அதிகாரிகள், அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோர் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் எக்ஸ்போவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய பெவிலியனிற்கு வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி,”துபாய் எக்ஸ்போவின் 28 நாட்களில் இந்திய பெவிலியனுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 150,000 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் அதிகமானோர் சென்ற பெவிலியன்களின் வரிசையில் இந்தியாவும் முன்னணியில் இருக்கிறது”

குறைந்த கால அளவில் இந்த சாதனையை இந்திய பெவிலியன் படைத்திருக்கிறது. வரும் வாரத்தில் தீபாவளிப் பண்டிகை வரவிருப்பதால் இந்திய பெவிலியனுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

india pavilion
1 Share
Share via
Copy link