இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அமீரகத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக இஸ்ரோவின் மூத்த ஆராய்ச்சியாளரும் இஸ்ரோ விஞ்ஞானப் பிரிவு செயலாளருமான ஆர். உமா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
துபாய் எக்ஸ்போ 2020 ன் இந்திய பெவிலியனில் நடைபெற்ற ஸ்பேஸ் வீக் (Space Week) என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உமா மகேஸ்வரன் இஸ்ரோ – அமீரகம் பல்வேறு விண்வெளி ஒப்பந்தங்களின் அடிப்படையில் இணைந்து செயல்பட இருப்பதாகத் தெரிவித்தார்.
கிரவுண்ட் ஸ்டேஷன் அமைத்தல், தொலைதூர நுண்ணுனர் தரவு பரிமாற்றம், வளிமண்டல மேலடுக்கு குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் இஸ்ரோவும் அமீரகமும் இணைந்து செயல்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீரகத்திற்காக ராக்கெட் ஒன்றினை இஸ்ரோ தயாரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – அமீரகம் இடையேயான இந்த விண்வெளி ஆய்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரத்தை இரு நாடுகளும் எட்ட வழி வகுக்கும் எனக் குறிப்பிட்ட உமாமகேஸ்வரன், இந்திய – அமீரக விண்வெளி ஆராய்ச்சியில் முதலீடு செய்ய வருமாறு பெருநிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.