UAE Tamil Web

வித்தியாசமான முறையில் கோல் அடித்து துபாய் எக்ஸ்போவின் 3 மாத கவுண்டவுனை துவங்கிவைத்த லியோனல் மெஸ்ஸி…!

MESSI

உலகின் பிரம்மாண்ட கண்காட்சியான துபாய் எக்ஸ்போ 2020 வரும் அக்டோபர் 1, 202 ஆம் தேதி துவங்கி மார்ச் 31, 2022 ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.

இதற்கான 3 மாத கவுண்டவுனை கால்பந்து கதாநாயகன் லியோனல் மெஸ்ஸி வித்தியாமான முறையில் துவங்கி வைத்திருக்கிறார். துபாய் எக்ஸ்போ மையத்தில் அமைந்துள்ள அல் வாஸில் பிளாஸாவின் உள்ளே கோல் அடித்து மெஸ்ஸி கவுண்டவுனை தட்டிவிட்டிருக்கிறார்.

உலகின் முதல் 360 டிகிரி அளவில் கட்டப்பட்ட இந்த மடத்தின் மையப்பகுதியில் உள்ள இடைவெளி வழியே மெஸ்ஸியின் கால்பந்து உள்ளே வீழ்வதாக துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

துபாய் எக்ஸ்போ 2020 ன் விலைப்பட்டியல்

  • ஒருமுறை மட்டும் செல்வதற்கு – 95 திர்ஹம்ஸ்
  • ஆறு மாதத்திற்கான பாஸ் வாங்க – 495 திர்ஹம்ஸ்
  • 18 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எந்த நேரத்திலும் இலவசமாக அரங்கினுள் நுழையலாம். இவர்களுடன் வருபவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.
  • பலமுறை உள்ளே செல்வதற்கான பாஸ் வாங்க – 195 திர்ஹம்ஸ் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துபாய் எக்ஸ்போ குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

MESSI
0 Shares
Share via
Copy link