UAE Tamil Web

எக்ஸ்போ 2020 கண்காட்சிக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி சான்று அல்லது நெகடிவ் சான்றிதழ் அவசியம்!

உலகின் பிரமாண்ட கண்காட்சிகளுள் ஒன்றான துபாய் எக்ஸ்போ 2020 அடுத்த மாதம் கோலாகலமாக தொடங்குகிறது. 6 மாதங்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தர இருக்கின்றனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு செல்வோர் கட்டாயம் நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதேபோன்று கண்காட்சிக்கான டிக்கெட் வைத்திருந்தால் அதனை காட்டி பிசிஆர் டெஸ்ட் இலவசமாகவும் செய்து கொள்ளலாம் என கண்காட்சி குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கண்காட்சி குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

1 Share
Share via
Copy link
Powered by Social Snap