அமீரகத்தில் சமீப காலமாகவே தினசரி கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் துபாய் எக்ஸ்போவின் ஜப்பான் பெவிலியனில் அமைந்துள்ள சுஷிரோ ரெஸ்டாரண்ட் ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக நடைபெறும் கொரோனா பரிசோதனைகளின் மூலம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக ரெஸ்டாரண்டை தற்காலிகமாக மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
முழு சுத்திகரிப்புப் பணிகள் அந்த உணவகத்தில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஜப்பான் பெவிலியன் தொடர்ந்து மக்களுக்காக திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.