அக்டோபர் 1 ஆம் தேதி துவங்க இருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 க்கான டிக்கெட் விற்பனைகள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் எக்ஸ்போ அமைப்பாளர்கள் புதிய ஆஃபர் ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளனர். அதன்படி, எக்ஸ்போவின் ஒருநாள் டிக்கெட் கட்டணமான 95 திர்ஹம்ஸ்-ல் ஒரு மாதத்திற்கான டிக்கெட்டைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் பாஸ் எனப்படும் இந்த டிக்கேட்டினைப் பெறுவதன்மூலம் 10 ஸ்மார்ட் கியூ (Smart Queue) புக்கிங்குகளையும் நீங்கள் பெறலாம். இதன்மூலம் நீங்கள் நெடுநேர வரிசையில் நிற்கவேண்டிய தேவை இருக்காது.
இந்த ஆஃபர் அக்டோபர் 15 ஆம் தேதிவரையில் மட்டுமே என்பதால், உங்களது டிக்கெட்டைப் பெற உடனே முந்துங்கள்.
டிக்கெட் கிடைக்கும் இடங்கள்:
துபாய் எக்ஸ்போ 2020 ன் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை வாங்கலாம். மெட்ரோ நிலையங்கள், Enoc அல்லது Eppco சேவை மையங்களில் நீங்கள் டிக்கெட்டைப் பெறலாம்.
டிக்கெட் கட்டணம்:
ஒருநாள் டிக்கெட் : 95 திர்ஹம்ஸ்
1 மாத டிக்கெட்: 495 திர்ஹம்ஸ்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
