UAE Tamil Web

துபாயில் ஒரு விளையாட்டுத் திருவிழா – இனி ஒவ்வொரு நாளும் சரவெடிதான்!

துபாய் எக்ஸ்போ 2020 பெரும் பொருட்செலவில் அடுத்த மாதம் மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் 25 மில்லியனுக்கு அதிகமானோர் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி நாடுகளில் கண்காட்சிக்கு வருகை தர உள்ளன. சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் பல அட்டகாசமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் துபாய் எக்ஸோ நடைபெறும் அதே சமயத்தில் 30 சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த துபாய் அரசு முடிவு செய்துள்ளது. கால்பந்து, கிரிக்கெட், ரக்பி, செஸ் என உலகின் முன்னணி விளையாட்டுகள் துபாய் எக்ஸ்போ நடைபெறும் சமயத்தில் துபாயில் நடைபெற உள்ளன.

பலராலும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் கால்பந்து விருதுகள் இதில் முக்கிய பங்கு வகிக்கும். முன்னதாக நடந்த துபாய் கண்காட்சிக்கு கால்பந்து நட்சத்திரங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்ட ஜாம்பவான்கள் வருகை தந்து சிறப்பித்துள்ளனர். அதேபோன்று இந்த முறையும் ஒருசில கால்பந்து ஜாம்பவான்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cristiano Ronaldo receives 10-year UAE Gold Card residency visa | Football – Gulf News

இதேபோல பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, துபாயில் நடைபெறுகிறது. ஆடவர், மகளிர் உலக கோப்பை ரக்பி தகுதிச்சுற்று ஆட்டம், சைக்கிளிங் போட்டி செஸ் உள்ளிட்டவற்றை நடத்தவும் துபாய் ஸ்போர்ஸ் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாகவும் எக்ஸ்போவுக்கு வருவோரை கவரும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap