UAE Tamil Web

துபாய் எக்ஸ்போ 2020 டிக்கெட் விற்பனை இன்றுமுதல் துவக்கம் – எப்படி புக் செய்வது..?

expo 2020

பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 ன் டிக்கெட் விற்பனை இன்றுமுதல் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கும் இந்த மாபெரும் கண்காட்சிக்கான சீசன் பாஸ் அல்லது குடும்பத்திற்கான டிக்கெட்டை (Family Package) ஆகஸ்டு 14 ஆம் தேதிக்குள் வாங்குவோர் துபாய் எக்ஸ்போவின் பிரம்மாண்ட துவக்க விழாவைக் காணும் வாய்ப்பைப் பெறலாம்.

ஆகஸ்டு 14 ஆம் தேதிக்குள் டிக்கெட் வாங்குவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 50 அதிஷ்டசாலி நபர்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் துவக்க விழாவைக் காணும் வாய்ப்பு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் செப்டம்பர் முதல்வாரத்தில் அறிவிக்கப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பிதழும் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டை வாங்க துபாய் எக்ஸ்போ இணையதளத்திற்குச் செல்லலாம். அதுமட்டுமல்லாமல் டிராவல் ஏஜெண்ட்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட உலகளாவிய மார்கெட்கள் என மொத்தம் 2,500 அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் மறுவிற்பனையாளர்களிடம் நீங்கள் டிக்கெட்டை புக் செய்யலாம்.

டிக்கெட் விலை நிலவரம்

  • ஒருமுறை மட்டும் செல்வதற்கு – 95 திர்ஹம்ஸ்
  • ஆறு மாதத்திற்கான பாஸ் வாங்க – 495 திர்ஹம்ஸ்
  • 18 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எந்த நேரத்திலும் இலவசமாக அரங்கினுள் நுழையலாம். இவர்களுடன் வருபவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.
  • பலமுறை உள்ளே செல்வதற்கான பாஸ் வாங்க – 195 திர்ஹம்ஸ் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆறுமாதம் நடைபெற இருக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

expo 2020
362 Shares
Share via
Copy link