உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 வரும் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்கான டிக்கெட்களை அமீரகம் முழுவதிலும் உள்ள Zoom ஸ்டோர்களில் வாங்கலாம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமீரகத்திற்கு வரும் சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் துபாய் மெட்ரோ நிலையங்கள், ENOC மற்றும் EPPCO பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள Zoom ஸ்டோர்களில் துபாய் எக்ஸ்போ 2020 க்கான டிக்கெட்களைப் பெற முடியும்.
டிக்கெட்களின் விலை
- ஒரு நாள் அனுமதிக்கான டிக்கெட் – 95 திர்ஹம்ஸ்
- 1 மாதத்திற்கான டிக்கெட் – 195 திர்ஹம்ஸ்
- எக்ஸ்போ நடைபெறும் 6 மாதங்களுக்குமான டிக்கெட் – 495 திர்ஹம்ஸ்.
அமீரகத்தில் 237 கடைகளுடன் இணைந்து இயங்குவரும் இந்த zoom ஸ்டோர் ஏற்கனவே துபாய் எக்ஸ்போ பற்றிய நோட் புக்குகள், பேனா, கீச்செயின், டி-ஷர்ட் ஆகியவற்றை விற்றுவருவது குறிப்பிடத்தக்கது.