UAE Tamil Web

அடேங்கப்பா…துபாய் எக்ஸ்போ 2020 ல் இந்தியா முதலீடு செய்த தொகை எவ்வளவு தெரியுமா..?

aman puri

அமீரகத்தில் அனைவரும் இப்போது அக்டோபர் 1 ஆம் தேதிக்கு வெயிட்டிங். ஏனென்றால் அப்போதுதான் உலகின் பிரம்மாண்ட கண்ட்காட்சியான துபாய் எக்ஸ்போ 2020 துவங்க இருக்கிறது. இது தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த மிகப்பெரிய கண்காட்சியில் இந்தியா முதலீடு செய்திருக்கும் தொகை அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.

துபாய் துணைத் தூதரகத்தின் தலைமை அதிகாரி டாக்டர். அமன்பூரி, துபாய் எக்ஸ்போவில் 520 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கொரோனாவிற்குப் பிறகு நடைபெறும் இந்த மிகப்பெரிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான விழாவில் அமீரகத்துடன் இந்தியா தோளோடு தோளோக உறுதுணையாக நிற்கும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில்,” மேக் இன் இந்தியா பிரச்சாரம், டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா பிரச்சாரத்தை முன்னெடுக்க இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இந்தியாவை புதுமை, அறிவு, பாரம்பரியம் மற்றும் கலைகளின் பூமியாக காட்ட விரும்புகிறோம். இந்தியா புதுமை மற்றும் படைப்பாற்றல் அடிப்படையில் முன்னேறும் நாடு என்பதை மக்கள் உணர வேண்டும். இது உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலைக் கொண்டுள்ளதாகத் திகழ்கிறது. இந்தியா ஒரு பில்லியன் யோசனைகளைக் கொண்ட ஒரு நாடு. எனவே, இந்த யோசனைகளிலிருந்து உலகம் பயனடையலாம். உலகத்துடன் ஈடுபடுவதன் மூலம் இந்தியா பயனடையலாம். இதற்கு எக்ஸ்போ ஒரு பாலமாக செயல்படும்” எனத் தெரிவித்தார்.

“கொரோனா சூழலுக்கு மத்தியிலும் பொருளாதார மீட்டுருவாக்கத்திற்கு வழிவகை செய்யும் நோக்கோடு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கும் அமீரக அரசுக்கு எங்களுடைய பாராட்டுக்கள்” எனவும் பூரி குறிப்பிட்டார்.

aman puri
4 Shares
Share via
Copy link