UAE Tamil Web

துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.. அதிவிரைவில் திறக்கப்படும் Expo City – இந்திய Pavilion இடம்பெறும் என்று அறிவிப்பு

துபாயின் ஆட்சியாளர் இன்று திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் “எக்ஸ்போ 2020” நிகழ்ச்சி நடந்த தளத்தை ஒரு புதிய நகரமாக மாற்றுவதாக அறிவித்துள்ளார். இது ஆறு மாத நிகழ்வின் அற்புதமான வெற்றியைக் குறிக்கிறது. மேலும் “இது துபாயின் மிக அழகான லட்சியங்களை பிரதிபலிக்கும் நகரமாக இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இப்பொது மக்களிடையே உள்ள மிகப்பெரிய கேள்வி எப்போது இந்த Expo City திறக்கப்படும் என்பது தான்.

துபாயின் இந்த புதிய ‘நகரம்’ அக்டோபர் 1, 2022 அன்று திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இது “எக்ஸ்போ 2020” முதன்முதலில் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டதிலிருந்து சரியாக ஒரு வருடத்தை குறிக்கிறது.

அலுவலகங்கள், ஓய்வு வசதிகள், உணவு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு வசதிகள் மற்றும் ஒரு மால் ஆகியவற்றைக் இந்த புதிய நகரம் கொண்டிருக்கும். இது துபாய் மெட்ரோ மூலம் அடையக்கூடியதாகவும், மற்றும் உலகத் தரம் வாய்ந்த துபாய் கண்காட்சி மையத்தையும் (DEC) கொண்டிருக்கும்.

இந்த மையம் பல்வேறு மாநாடுகள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவின் கிங்டம் பெவிலியனையும் பார்வையாளர்கள் இந்த நகரத்தில் பார்க்கமுடியும்.

மேலும் லக்சம்பர்க், ஆஸ்திரேலியா, பாக்கிஸ்தான், இந்தியா, மொராக்கோ மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பெவிலியன் இதில் வரும்காலங்களில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap