UAE Tamil Web

துபாயில் CID அதிகாரிகள் போல நடித்து 4.5 மில்லியன் Saudi Riyal கொள்ளை.. கணக்காளர் போட்ட பலே பிளான் – 5 பேரை தலையில் தட்டி தூக்கிய போலீசார்!

துபாய் ஜெபல் அலி தொழிற்பேட்டையில் (Industrial Area) CID அதிகாரிகள் போல வேடமணிந்து வந்த 11 பேர் கொண்ட கும்பலால் நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

அரேபிய நாட்டை சேர்ந்த 11 பேர் கொண்ட ஆண்களின் குழு ஒன்று சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன் பாதிக்கப்பட்டவரின் காரில் இருந்து சுமார் 4.5 மில்லியன் சவுதி ரியால்களை திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்கள் தங்கள் குற்றத்தை பொது வழக்குக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பாகவே ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை அறிக்கையின்படி, ஜெபல் அலியில் நடந்த கொள்ளை குறித்த புகாரை ஒரு போலீஸ் அதிகாரி பெற்றுள்ளார்.

ஒரு CID குழு உடனடியாக குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவரைச் சந்தித்துள்ளது, அவர்கள் (பல்வேறு அரபு தேசங்களைச் சேர்ந்தவர்கள்) பாதிக்கப்பட்டவரை தடுத்ததாகவும், அவர்கள் CID அதிகாரிகள் என்று கூறி அவர்கள் அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்ததாகவும் கூறப்படுகிறது.

சுமார் 4.5 மில்லியன் சவுதி ரியால் பணத்தை ஓமர் என்ற நபரிடம் கொடுக்க சென்றதாக பாதிக்கப்பட்டார் கூறினார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது, மேலும் விசாரணையில் அந்த பணத்தை பெற வேண்டிய ஓமர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் பாதிக்கப்பட்ட நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார்.

உமர் மற்றும் பிற கும்பலை சேர்ந்தவர்கள் ஷார்ஜாவில் கைது செய்யப்பட்டனர். CID குழு மற்ற சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, இருவரை துபாயிலும், மற்றொருவரை அஜ்மானிலும் கைது செய்தனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap