UAE Tamil Web

ஷார்ஜா நகராட்சியில் வேலை.. அமீரகம் முழுவதும் வைரலான Fake Post – விழிப்போடு செயல்பட SCM அறிவுறுத்தல்

ஷார்ஜா நகராட்சியில் (SCM) வேலை காலியிடங்கள் உள்ளது குறித்து சமூக ஊடகங்களில் வைரலான ஒரு பதிவு போலியானது என்று ஷார்ஜா சிவில் அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த Recruitment அதன் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் தெரிவிக்கப்படவில்லை என்றும் நகராட்சி தெரிவித்துள்ளது.

“SCM ஆனது அதன் இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அதன் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு சேனல்களை அல்லது 993 என்ற அதன் அழைப்பு மையத்தை எப்பொழுதும் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது துபாய் மற்றும் அமீரகத்தில் உள்ள பல நிறுவனங்கள், குறிப்பாக விமான சேவை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள காலியிடங்களை நிரப்ப பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது. உண்மையில் இதுபோன்ற நேரங்களில் மக்கள் சரியாக தகவலை மட்டுமே நம்பி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆகவே இதுபோன்ற சமயங்களில் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap