UAE Tamil Web

இந்த நம்பர்-ல இருந்து கால் வந்தா எடுக்காதீங்க…UAE சென்டரல் பேங்கின் பேரில் தொழிலாளர்களுக்கு வலைவிரிக்கும் மோசடிக் கும்பல்..!

இணையம் மூலமாக கொள்ளையடிக்கும் மோசடி ஆசாமிகள் இருவகை. முதலாவது எளியவர்களைக் குறிவைப்பது. பெரும்பாலும் தொழிலாளர்கள். அவர்களை பதட்டமடையச் செய்து அதன்மூலம் அவர்களுடைய வங்கித் தகவல்களை பெற்று, கம்பி வீட்டிவிடுவார்கள்.

இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் அயோக்கிய சிகாமணிகளில் மூத்த சிகாமணிகள். பெரிய பெரிய நிறுவனங்களை/ பெரும் தலைகளை குறிவைப்பவர்கள். அவர்களிடம் இருக்கும் தொழில்நுட்ப பலம் நம்ப முடியாததாக இருக்கும். சரி, இப்போது அதைப்பற்றி என்ன? இருக்கிறது.

இன்று நமது UAE Tamil Web குழுவின் ஆசிரியர் ஒருவருக்கு வாட்சாப் மெசேஜ் ஒன்று வந்தது. உங்களுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் முடக்கப்பட இருப்பதாகவும் அதனால் உடனடியாக உங்களுடைய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கவில்லையென்றால் உங்களுடைய கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என அமீரக மத்திய வங்கியின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.

fake bank

சரி, மத்திய வங்கியையே வம்பிழுக்கும் ஆட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் எழுந்து, உடனேயே அந்த எண்ணிற்கு (மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்) போன் செய்தோம். நமது ஆசிரியர் ஆங்கிலத்தில் பேசத் துவங்க, ஹிந்தி.. ஹந்தி.. என்றது மறுமுனைக் குரல்.

நாமும் ஹிந்தியில் தொடர, திடீரென போனில் மற்றொரு நபர் பேசத் தொடங்கினார். அவர்களைப் பற்றி விசாரிக்கும் போதே, போனை கட் செய்துவிட்டனர். மீண்டும் அழைத்ததற்கு எவ்வித பதிலுமில்லை.

அமீரக மத்திய வங்கியின் பெயரை உபயோகிப்பதால் எளிதில் தொழிலாளர்கள் அச்சப்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே மேற்கண்ட எண்ணிலிருந்து போன் காலோ, வாட்சாப் மேசெஜோ வந்தால் அதனைத் தவிர்த்துவிடுங்கள் என வலியுறுத்துகிறது UAE Tamil Web குழு.

12 Shares
Share via
Copy link