UAE Tamil Web

“அமீரகத்தில் 10,000 திர்ஹம் வெல்வதற்கான வாய்ப்பு..” போலி Post குறித்து எச்சரிக்கும் துபாய் DEWA – மக்களே கவனமாக இருங்கள்!

துபாயின் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dubai Electricity and Water Authority) சமூக ஊடகங்களில் பரப்பப்படும் சில பதிவுகள் மற்றும் செய்திகள் தங்களுடைய சேவை வழங்குநரால் அனுப்பப்படவில்லை என்றும் அவை மோசடியானவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் குழுக்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு போலி சமூக ஊடக இடுகை, DEWA பற்றி சில கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு மக்களைக் கேட்கிறது. மேலும் அவர்கள் 10,000 திர்ஹம் வரை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் கூறி ஒரு ஏமாற்று வலையை வீசுகின்றது.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள DEWA அமைப்பு “பரிசுகளை வெல்வதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் பில்களைச் செலுத்துமாறு அல்லது சில கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு மோசடியான செய்திகள் அனுப்பப்படுகின்றன என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

DEWA வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்கள் குறித்து அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம், Verify செய்யப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் ஆகியவற்றை அணுகி தெரிந்துகொள்ளுமாறு நுகர்வோரை DEWA கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில், ஷார்ஜா காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற கணக்குகளைக் பின்தொடர்வது மற்றும் அதில் தங்கள் தனிப்பட்ட தகவல்களை அளிப்பது குறித்து கவனமாக வெளியிடுவது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆகவே மக்கள் இதுபோன்ற போலியான செய்திகளை கண்டு ஏமாறாமல் விழிப்போடு செயல்படுமாறு DEWA கோரிக்கைவிடுத்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap