UAE Tamil Web

ட்ரோன்கள் மூலமாக மழையைக் கொண்டுவருகிறதா துபாய்..?

அமீரகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க மேகங்களை தூண்டி செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிகளும் அது குறித்த ஆய்வுகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. 50 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருவதால் சூட்டை சமாளிக்கும் முயற்சியாக அண்மையில் துபாயில் செற்கை மழை பொழிந்தது.

Credit : NCM

இது ட்ரோன்கள் மூலமாக நிகழ்ந்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையம் இதனை மறுத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர். அஹ்மத் ஹபீப், ட்ரோன்கள் மூலம் செயற்கை மழை பொழியச் செய்யும் திட்டம் இன்னும் முடிவடையவில்லை என தெரிவித்தார். அதன் ஆய்வு படிப்படியாக வளர்ந்து வருவதாகக் கூறிய ஹபீப், அண்மையில் பெய்த மழையானது விமானம் மூலம் மேகங்களில் வேதிப்பொருட்களை தூவச் செய்ததன் வெளிப்பாட்டால் பெய்தது என விளக்கம் அளித்தார்.

Rain in Dubai UAE, Cloud Seeding, Waether Today Video, Artificial rain in Dubai: UAE rain: The story behind cloud seeding and how much it costs - Videos - Arabianbusiness
Credit : Arabian Business

எதிர்காலத்தில் ட்ரோன்கள் மூலம் க்ளவுட் சீடிங் எனும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேகங்களுக்கு இடையே சென்று எலெக்ட்ரிக்கல் சார்ஜை உருவாக்கி மழை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயற்கை மழை மூலம் ஓரளவு வெப்பத்தை தணித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் அமீரக வானியல் ஆராய்ச்சியில் புதிய மைல்கல் எட்டப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காலநிலை மாற்றத்தை சமாளிக்க புது புது திட்டங்களும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3 Shares
Share via
Copy link