UAE Tamil Web

அமீரகம் திரும்பும் ஆசையில் போலி ஏஜெண்ட்களை நம்பி ஏமாறும் இந்தியர்கள்..!

Airport

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்புவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான மக்கள் பணிக்குத் திரும்ப முடியாமல் தாயகத்திலேயே முடங்கியுள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்டு நூதன முறையில் மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. ஏமிராட்டிகள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே அமீரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

UAE extends ban on passengers from India: Details | The News Minute
Credit : The News Minute

இதனால் இந்தியர்கள் அண்டை நாடுகளில் 14 நாள் தனிமைப்படுத்திக் கொண்டு அமீரகத்திற்குள் நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேரடியாக அமீரகத்திற்குள் நுழைய இந்தியர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் அமீரக தூதரகம் போன்ற போலியான வெப்சைட் மூலம் நூதன முறையில் மோசடி நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. (https://www.uaeembassy.in/) எனும் போலி இணையதளத்தில் அமீரகத்திற்குள் நுழைய விண்ணப்பிக்குமாறு கூறி மோசடி கும்பல் ஒன்று அதிகளவில் பணம் வசூலித்துள்ளது.

How to Tell If a Website is Legit in 10 Easy Steps - InfoSec Insights

அனுமதிச் சீட்டு வழங்குவதாகக் கூறி இந்தியர் ஒருவரிடம் அந்த கும்பல் 8000 ரூபாய் வரை வசூலித்து ஏமாற்றியுள்ளது. இதேபோல போலியான ஈ மெயில்கள் மூலம் எளிய முறையில் அமீரகம் திரும்ப தங்கள் ஏஜெண்ட்களை வாட்சப்பில் அணுகுமாறு தொடர்ந்து தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது போன்ற மோசடி கும்பலிடம் யாரும் சிக்க வேண்டாம் என அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. எந்தவித கடிதங்களோ அனுமதிச்சீட்டோ தூதரகம் சார்பில் வழங்கப்படாது என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியே விமான போக்குவரத்து தொடங்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. இந்தியா – அமீரகம் இடையிலான விமான போக்குவரத்திற்கான தடை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Airport
11 Shares
Share via
Copy link