UAE Tamil Web

கிளிக் செய்யுங்க; கார் வெல்லுங்க – வாட்சாப்பில் வலம்வரும் வதந்தி – உஷார் மக்களே..!

WhatsApp Image

சமூக வலைத்தளங்களில் உள்ள நன்மைகள் என எடுத்துக்கொண்டால் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றால் சில நேரங்களில் நமக்கு தாளாத தலைவலியும் வருவதுண்டு.

பூப்போட்ட காபி கப்புடன் குட்மார்னிங் சொன்னால் தான் இவ்வுலகம் விடியும் என உறுதியாக நம்பும் உத்தமர்கள் துவங்கி வைரசை அனுப்பி சோலியை முடிக்கக் காத்திருக்கும் பிரகஸ்பதிகளால் ஆனது வாட்சாப்.

வாட்சாப்பில் ஒவ்வொரு சீசனுக்கும் புதிது புதிதாக எதையாவது அனுப்பி நம்மை கடுப்பேற்றும் வரிசையில் டாடா குழுமத்தின் 150 வது ஆண்டு விழா ஆஃபர் குறித்த செய்தியும் சேர்ந்திருக்கிறது.

அமீரகத்தில் கடந்த சில தினங்களாகவே வாட்சாப் ஃபார்வர்டு மெசேஜ் ஒன்று வைரலாகப் பரவிவருகிறது. அதில் டாடா குழுமம் துவங்கி 150 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு குறிப்பிட்ட சிலருக்கு கார்கள் பரிசாக அளிக்கப்படுவதாகவும் அதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து போட்டி ஒன்றில் கலந்துகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1868 ஆம் ஆண்டு ஜாம்செட்ஜி நுசெர்வாஞ்சி டாடா (Jamsetji Nusserwanji Tata) என்பவரால் டாடா குழுமம் துவங்கப்பட்டது. ஆக, டாடா குழுமம் துவங்கி தற்போது 153 வருடங்கள் ஆகிவிட்டன. இதை எளிய கூகுள் தேடலில் கண்டுபிடிக்கலாம். எந்த சூழலிலும் மூளையை உபயோகிக்க மாட்டேன் என கழற்றி வைத்த மகான்கள் அனுப்பும் இந்த மேசெஜிற்கு யாரும் பதில் சொல்ல வேண்டாம் என UAE Tamil Web குழு வாசகர்களை வலியுறுத்துகிறது.

WhatsApp Image
1 Share
Share via
Copy link