அமீரகத்தில் ஏற்படும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 29,539 போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
துபாய் காவல்துறையின் பொதுப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், துபாய் காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த 21,283 அபராதங்களை இந்தத் திட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் 8,256 அபராதங்கள் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 28,662 போக்குவரத்து அபராதங்கள், போக்குவரத்து விதிமீறல்களைப் புகாரளிக்கும் திட்டத்தின் கீழ் வந்துள்ளது.
துபாய் சாலைகள் மற்றும் தெருக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் செயலி அல்லது துபாய் காவல்துறையின் எண் (901)-ஐ அழைப்பதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஒட்டுநர்கள் மீது புகாரளிக்கலாம்.
காவல்துறைக்கு புகார் சென்றால், அறிக்கையைச் சரிபார்த்த பின் கேமராக்களை ஆய்வு செய்து போக்குவரத்தை மீறியவருக்கு எச்சரிக்கை வழங்கி உடனடியாக அபராதம் விதிக்கப்படும் ” என்றார் அல் மஸ்ரூயி.
இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களைப் புகாரளிக்கும் சேவையை தவறாக பயன்படுத்தி மற்ற வாகன ஓட்டிகள் மீது பொய்யாக குற்றம் சாட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அல் மஸ்ரூயி எச்சரித்தார்.
