UAE Tamil Web

VPN மூலம் “அந்த மாதிரி” செயல்களில் ஈடுபடுவோருக்கு 20 லட்சம் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..!

VPN

தவறான ஐபி முகவரியைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை அல்லது 50,000 முதல் 20 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அமீரக பொது வழக்குத்துறை நினைவுபடுத்தியுள்ளது.

- Advertisment -

இதுகுறித்து பொது வழக்குத்துறை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், கணினி நெட்வொர்க்கில் ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒரு ஐபி முகவரி (IP – Internet Protocol) கொடுக்கப்பட்டிருக்கும். தகவல் பரிமாற்றத்திற்காக இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. சைபர் குற்றங்களுக்கு எதிரான (மற்றும் அதன் திருத்தங்கள்) அமீரக பெடரல் சட்டம் எண் 5 (2012) ன் 9 வது ஆர்டிகிளின்படி தவறான ஐபி முகவரியை உபயோகிப்பது அல்லது மூன்றாம் தரப்பு முகவரியை (third-party) உபயோகிப்பது அல்லது இதுபோன்ற வேறு வழிமுறைகளைப் பின்பற்றி குற்றச்செயல்களில் ஈடுபடுவது அல்லது அதனை மறைப்பது ஆகியவை குற்றமாகும்.

மேற்கண்ட சட்டத்தின்படி இக்குற்றத்திற்கு சிறைத்தண்டனை அல்லது 50,000 முதல் 20 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டுமே (சிறைத்தண்டனை மற்றும் அபராதம்) விதிக்கப்படும்.

முன்னர் 2012  ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி அபராதத்தொகை குறைவாக இருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி தொகையானது அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் போன்ற குற்றங்களை VPN உதவியுடன் செய்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என பொது வழக்குத்துறை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.