UAE Tamil Web

அபுதாபி: உணவகங்களில் இனி குடும்பமாக அமர்ந்து சாப்பிட அனுமதி – ஆனால் இது கட்டாயம்..!

Dubai-restaurant-

அபுதாபி: ரெஸ்டாரன்ட் மற்றும் கபேக்களில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளத் தடையில்லை என அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே டேபிளில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமானாலும் அமர்ந்து உணவு உண்ணலாம் என்ற இந்த நடைமுறை இன்று (ஜூன் 5 ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

அதேநேரத்தில் உணவகங்கள் மற்றும் கபேக்கள் தங்களது 60 சதவீத திறனுடன் இயங்கவேண்டும் என்ற விதியை மறக்கக்கூடாது எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

UAE-Law
Image Credit: Gulf Today

மேலும், சமூக பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக அரசு விதித்துள்ள பிற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரெஸ்டாரன்ட் மற்றும் கபேக்கள் தவறாமல் பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.