UAE Tamil Web

உதவி தேவை: இவரை எங்காவது பார்த்தால் உடனடியாக இந்த நம்பருக்கு அழையுங்கள்..!

Missing-1

ஷார்ஜாவைச் சேர்ந்தவர் ஃபைசல் முகமது. 42 வயதான இவர், கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அல் கசாம்யாவில் இருந்த தனது வீட்டினை விட்டுச் சென்றிருக்கிறார். அப்போதிலிருந்து அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில் டிசம்பர் 3 ஆம் தேதி காலை 4.07 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து பைசலின் சகோதரர் ஜமால் முகமது ஷார்ஜா காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

மேலும், பைசல் மனநல பாதிப்பு கொண்டவர் எனவும் ஜமால் தெரிவித்திருக்கிறார். இறுதியாக அவர் கண்டோரா (kandoura) உடையும் தலையில் குத்ராவும் அணிந்திருந்ததாக அவரைது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தாலோ இவரை எங்காவது பார்த்தாலோ 06-5079555 என்ற எண்ணிற்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காணாமல்போன பைசலின் சகோதரருக்கு 0506947707 என்ற எண்ணிற்கோ அழைக்கும்படி அவரது குடும்ப உறுப்பினர்கள் உதவி கோரியிருக்கிறார்கள்.

Missing-1
6 Shares
Share via
Copy link