குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை அமீரக அரசு வழங்கிவருகிறது. கலைப் பிரிவில் இந்தியாவைச் பிரபல நடிகர்களான சஞ்சய் தத், மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நடிகையான மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்க அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து நேற்று மீரா ஜாஸ்மினுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
