21.7 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

உலக உணவுத் திட்டம் (WFP).. உலகின் எந்த மூலையில் எமர்ஜென்சி உதவி கோரினாலும் விரைந்து பதிலளிக்கும் துபாய் WFP அலுவலகம்.!

dubai

உலகில் எங்கு ஆயுத மோதல் ஏற்பட்டாலும் அல்லது இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் முதல் மனிதாபிமான பதில் உலக உணவு திட்டம்(World Food Programme)துபாய் அலுவலகத்திலிருந்து தான் வருகிறது என்று, அமீரகத்தின் WFP இயக்குனரான மாகீத் யாஹியா குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மனிதாபிமான அவசரநிலையிலும் உடனடியாக பதிலளிக்கும் செயல்றனில் துபாய் WFP மையம் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் கூறியுள்ளார். துபாயின் உலகத் தரம் வாய்ந்த தளவாட வசதிகள்,தாராள மனப்பான்மை உள்ளிட்டவை அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அமைப்பு செய்யும் முக்கியமான மனிதாபிமானப் பணிகளுக்கு பெரும் ஒத்துழைப்பை வழங்குகிறது என்றார்.

சர்வதேச மனிதாபிமான நகரத்தில்(International Humanitarian City) அமைந்துள்ள WFP-ன் துபாய் அலுவலகம், உலகளவில் அமைந்துள்ள ஆறு WFP மையங்களிலேயே மிகப்பெரியது. இது மருத்துவ கருவிகள், உயர் ஆற்றல் பிஸ்கட்ஸ்(high energy biscuits), தளவாடங்கள் மற்றும் மனிதாபிமான உபகரணங்கள் போன்றவற்றை நிர்வகிக்கிறது.

2 மாதங்களுக்கு முன் மத்திய ஆபிரிக்க குடியரசிற்கான உணவு வழங்கலில் சிக்கல் ஏற்பட்ட போது, துபாயிலிருந்து உயர் ஆற்றல் பிஸ்கட் கொண்டு செல்லப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டது. துபாயின் தாராள பங்களிப்புகளால் 35 மெட்ரிக் டன் உயர் ஆற்றல் பிஸ்கட்ஸ் வரை கொண்டு செல்ல முடியும். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு உணவளிக்க உதவும் WFP-ன் சிறந்த நன்கொடையாளர்களில் ஒன்றாக அமீரகம் உள்ளது. இதற்கு அமீரகத்திற்கு குறிப்பாக துபாயின் மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார் யாஹியா.

2019-ல்ஆண்டில் அமீரகம் ஆறாவது பெரிய நன்கொடையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது. அவசரகால பொருட்களை ஒரு இடத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும் போது அல்லது நமக்கு விமானங்கள் தேவைப்படும்போது சரியான நேரத்தில் கிடைக்கிறது. WFP அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது “பெரிய பொறுப்பு” என்றார் யாஹியா. உலகின் பல்வேறு மூலைகளிலும் WFP உடன் பணிபுரியும் 17,000 பேருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது . அடுத்த வேளை உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தூங்கச் செல்லும் 680 மில்லியன் மக்களை இது கவனத்திற்கு கொண்டுவருகிறது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றால் போடப்பட்ட லாக்டவுன் காரணமாக விமான போக்குவரத்து தடைப்பட்டதால் WFP மனிதாபிமான பணிகள் பெரும் சவாலை எதிர்கொண்டன. எனினும் சொந்த விமான சேவையான UNHAS-ஐ பயன்படுத்தி, மார்ச் மாதத்திலிருந்து 160-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களை அனுப்பியுள்ளதாக கூறினார்.



error: Alert: Content is protected !!