UAE Tamil Web

8 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துபாய் இளவரசர் – வைரலாகும் புகைப்படம்..!

maj-fazza-large

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் 8 வயது சிறுவனுக்கு துபாய் பாலைவனத்தில் காரோட்ட கற்றுக்கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Maj (@maj)

தனது நண்பரான அஹமத் ஜாபர் அல் ஹர்பியின் மகனான முகமது பின் அஹமத் ஜாபர் அல் ஹர்பி என்றால் துபாய் இளவரசருக்கு கொள்ளைப் பிரியமாம். போலவே சிறுவன் ஹர்பிக்கு இளவரசருடன் நேரம் செலவிடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by Maj (@maj)

தனக்கு காரோட்டக் கற்றுக்கொடுக்கும்படி ஹர்பி கேட்க, துபாய் பாலைவனத்தில் துபாய் இளவரசரும் கற்றுக்கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சாகச பயணங்களின் போதும் ஹர்பியை அழைத்துச் செல்வது இளவரசரின் வழக்கமாகும்.