அமீரகத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளாக Mahzooz Drawவில் பங்கேற்று வரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், இறுதியாக தற்போது தனது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஸ்டோரேஜ் பிரிவில் தற்போது பணிபுரியும் 37 வயதான பொறியாளர் ஜோஸ், சமீபத்திய Raffle டிராவில் 1,00,000 திர்ஹம் பரிசை தட்டிச்சென்ற மூன்று அதிர்ஷடசாலிகளில் ஒருவர் ஆவார்.
ஊடகங்ளிடம் பேசிய அவர், “நான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக Mahzooz கிராண்ட் டிராவில் பங்கேற்று வருகிறேன். நான் எனது இன்பாக்ஸைத் திறந்து, மஹ்சூஸிடமிருந்து எனது வெற்றியை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலைப் பார்த்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.
கடந்த மே 21 அன்று நடைபெற்ற 77வது வாராந்திர மஹ்ஸூஸ் கிராண்ட் டிராவில், 22 அதிர்ஷ்டசாலிகள் இரண்டாம் பரிசான 1 மில்லியன் திர்ஹம்களைப் பகிர்ந்துகொண்டு தலா 45,454.54 திர்ஹம்களை பரிசாக பெற்றனர்.
வெற்றியாளர்களில் ஒருவரான, 44 வயதான மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர், இந்த புதிய வெற்றிக்கு நன்றி, இனி தனது வாழ்க்கை மிகுந்த அர்த்தமுள்ளதாக மாறப்போகிறது என்று கூறினார்.