UAE Tamil Web

மஹ்சூஸ் டிரா: முதல் முறை பங்கெடுத்த போதே வெற்றி கண்ட இந்தியர் – பாட்டியின் இறுதிச்சடங்கியில் பங்கேற்றவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

துபாயில் நடந்த சமீபத்திய மஹ்சூஸ் டிராவில் 100,00 திர்ஹம் வென்ற மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்களில் பிலிப்பைன்ஸ்  நாட்டைச் சேர்ந்த மேரியும் ஒருவர்.

முன்னதாக லோட்டோ டிரா என அழைக்கப்பட்ட இந்த டிரா தற்போது, மஹ்சூஸ் டிரா என்ற மறு அவதாரம் எடுத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இந்த போட்டியின் குலுக்கல் நடைபெறும்.

அந்த வகையில், 41 வயதான ரியல் எஸ்டேட் முகவரான மேரி, தனது வெற்றியைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “எனது பாட்டியின் மரணத்தை நினைத்து நான் துக்கத்தில் இருந்தபோது, ஒரு நண்பர் இந்த நல்ல செய்தியை தெரிவிக்க தொலைபேசியில் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

“பாட்டியின் இறுதிச்சடங்கு நாளில் பிலிம்பைன்சில் சோகமாக ஒரு அறையில் அமர்ந்திருந்த போது, மஹ்சூஸ் டிரா வெற்றி எனக்கு தெரிய வந்தது. அன்பானவர்களை கடந்த ஆண்டு இழந்த நிலையில், இந்த ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்தேன். இந்த வெற்றியின் மூலம், இந்த ஆண்டை நான் நம்பிக்கையுடன் கடப்பேன்” என்ற மேரி, மஹ்ஸூஸிலிருந்து வெற்றி பெற்றது எனக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக” தெரிவித்தார்.

“100,000 திர்ஹம் பரிசுத்தொகையை வைத்து, தேவைப்படுபவர்களுக்கு நன்கொடை அளிப்பது, தனது இரண்டு வயது மகளுக்குச் சேமிப்பை அமைப்பது மற்றும் பிலிப்பைன்ஸில் வீடு கட்டுவது ஆகிய தனது இலக்கை இப்போது நிறைவேற்ற முடியும் என மேரி கூறியுள்ளார்.

தொற்றுநோய் எனது கனவுக்கு பிரேக் போட்டது. ஆனால் இந்த பரிசுத் தொகை ஒரு ஆசீர்வாதம். எங்கள் கனவு இல்லத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு நாங்கள் கடினமாக சம்பாதித்த சேமிப்பில் மூழ்க வேண்டியதில்லை” என்று மேரி கூறினார்.

முதல் முறை அதிர்ஷ்டசாலி

Anckur

39 வயதான இந்தியர் அன்குர், மஹ்சூஸ் டிராவில் தனது முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். “செய்தித்தாள்களில் மஹ்சூஸ் வெற்றியாளர்களின் கதைகளைப் படித்த பிறகு நான் ஒரு தூண்டுதலின் பேரில் பங்கேற்றேன்.துபாய் எல்லோமே சிறப்பாக செய்யக்கூடிய இடமாக உள்ளது. எனக்கும் என் மனைவிக்கும் சில லட்சியங்கள் உள்ளன. மஹ்சூஸ் வெற்றியின் மூலம், நாம் இப்போது அவற்றை நிறைவேற்ற முடியும்.

மற்றொரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்

அல் ஐனில் இருந்து பங்களாதேஷின் தனிப்பட்ட ஓட்டுநர் ஜாஷிம் 100,00 திர்ஹமும் வென்றார். இவர் தனது பொறுமைக்கு பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நான் நான்கு மாதங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளேன். எனது முதல் திட்டம், எனது இந்த வெற்றியைப் பயன்படுத்தி எனது குடும்பத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவது. மீதமுள்ள தொகையை குறைந்த வருமானம் உள்ள எனது நண்பர்களுக்கு உதவவும் பயன்படுத்துவேன். மஹ்சூஸ் எனக்கு ஒரு உயிர்நாடியைக் கொடுத்துள்ளது. அந்த நன்மையையும், நம்பிக்கையையும் பரப்புவது எனது வேலை” என்று ஜாஷிம் தெரிவித்துள்ளார்.

1 Share
Share via
Copy link