UAE Tamil Web

மகன் இறந்த தேதியில் வாங்கிய மஹ்சூஸ் (Mahzooz) டிக்கெட் மூலமாக தாய்க்கு கிடைத்த ஜாக்பாட் – தனது மகனின் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பணத்தை அளிக்க இருப்பதாக உருக்கத்துடன் கூறிய தாய்..!

nat-combo-winner

அபுதாபி வசிப்பாளரான கேத்தரின் (38) கடந்த மார்ச் 8 ஆம் தேதி, தனது வாழ்வின் மிக மோசமான தினத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். அது, அவரது இரண்டாவது மகனின் இறந்ததினம். பிலியரி அட்ரேசியா (biliary atresia) என்னும் குடல்நோய் அவரது மகனின் உயிரைக் குடித்துவிட்டது.

- Advertisment -

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான கேத்தரின், தனது மகனின் நோய் தீவிரமடைந்ததால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை எனக் கண்ணீருடன் கூறுகிறார். அவனது இறந்த தினத்தன்று புகழ்பெற்ற மஹ்சூஸ் (Mahzooz) டிராவில் கலந்துகொள்ள விருப்பப்பட்டிருக்கிறார் கேத்தரின். அவருக்குள் ஒரு நம்பிக்கை சட்டென ஆழ வேர்விட்டு கிளை பரப்ப, உடனடியாக டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

இந்த டிராவைப் பொறுத்தவரையில் மொத்தம் 6 எண்களைக் குறிப்பிட வேண்டும். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் எண்ணும், நாம் குறிப்பிட்ட எண்ணும் முற்றாக பொருந்திப்போனால் ஜாக்பாட் தொகை கிடைக்கும். அவ்வாறு கேத்தரின் நிர்ணயித்த 6 எண்களில் 5 எண்கள் பொருந்திப் போயிருக்கின்றன. இதனால் போட்டியின் இரண்டாம் டயர் வெற்றியாளராக இவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார். ஆனால், கேத்தரின் அந்த எண்களை தேர்ந்தெடுத்த விதம் தான் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

அவர் குறிப்பட்ட எண்கள்: 3-8-19-24-25-47 . இதில் அவரது மூத்த மகனின் பிறந்த தினம் 3 ஆம் தேதி, இரண்டாவது மகன் இறந்ததினம் மார்ச் 8 ஆம் தேதி, அவரது மூன்றாவது மகன் பிறந்த தினம் 19 ஆம் தேதி, அவருடைய பிறந்ததினம் 24 ஆம் தேதியாகும். தன்னுடைய கனவில் 25 என்ற எண் தோன்றியதாக கேத்தரின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஒருவேளை என் மகன் சொர்க்கத்திலிருந்து எனக்கு இந்தப் பரிசை அளித்திருக்கக்கூடும் எனச் சொல்லும்போது கேத்தரீனின் கண்கள் ஈரமாகியிருந்தன. அந்தக் கண்ணீருக்கு மகிழ்ச்சி மட்டுமே காரணம் இல்லை.

இதே எண்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபர்ஹான் என்பவரும் குறிப்பிட்டிருந்ததால் பரிசுத்தொகையான 10 லட்சம் திர்ஹம்ஸ் இருவருக்கும் தலா 5 லட்சம் திர்ஹம்ஸ் என பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

என் மகனின் நிலை யாருக்கும் வரக்கூடாது

“கிடைத்த பணத்தில் என் மகனின் உயிரைக் குடித்த அந்தக் கொடும் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ இருக்கிறேன். சர்ச் மூலமாக கஷ்டப்படும் மக்களுக்கும், எனது எதிர்காலத்திற்கும் திட்டமிடுவேன்” என கேத்தரின் தெரிவித்தார்.

இதை எதிர்பார்க்கவில்லை

மார்ச் 13 ஆம் தேதி நடைபெற்ற இந்த குலுக்கலில் அபுதாபி வாழ் பாகிஸ்தான் நபரான ஃபர்ஹானுக்கு 5 லட்சம் திர்ஹம்ஸ் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய அவர்,” எனக்கு மின்னஞ்சல் வந்தபோது என்னால் அதனை நம்பமுடியவில்லை. நான் பல காலமாக இந்தப் போட்டியில் பங்கேற்றுவருகிறேன். பல மக்களுக்கு அதிர்ஷ்டத்தை இந்தப் போட்டி வழங்கியிருக்கிறது. இந்தப் பணம் மூலமாக கராச்சியில் புதிய வீடு ஒன்றினைக் கட்ட இருக்கிறேன். இனி கடன் குறித்து கவலைப்படத் தேவையில்லை” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.