10 மில்லியன் திரகம் பரிசை தட்டி சென்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்.!

அபுதாபி பிக் டிக்கெட்(Big Ticket) மாதம் மாதம் பல்வேறு குழுக்கள் பரிசு போட்டிகளை நடத்துவது வழக்கம். இதில், பெரும்பாலாக இந்தியர்களே அதிகம் வெற்றிபெற்றும் வருவார்கள்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாத 10 மில்லியன் திரகம் பரிசுக்கான குழுக்கள் செவ்வாய்க்கிழமை(03.09.2019) இரவு அபுதாபி விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில், அதிர்ஷ்டவசமாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ‘Marelie David’ 10 மில்லியன் திரகம் பரிசை தட்டி சென்றார்.

இந்த பெண்ணை வெற்றி பெற வைத்த டிக்கெட் நம்பர் (Ticket No: 172193). இந்த டிக்கெட்டை ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி இவர் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், இவர் வெற்றி பெற்ற தொகை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு 142 மில்லியன் அதாவது 14 கோடி 20 லட்சம் ஆகும். (இன்றைய exchange நிலவரப்படி)

இந்த ‘Big 10 Million Series 207’ போட்டியில் 7 இந்தியர்கள், 2 பிலிப்பைன்ஸ் நாட்டினர் மற்றும் 1 பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்றவர்களின் முழு விவரம் கிழே:

Big Ticket 10 Million Series 207 Winner List
Image Credits: Big Ticket Abu Dhabi

வீடியோ: