UAE Tamil Web

ஒரே இரவில் கோடீஸ்வரரான டிரைவர் : மஹ்சூஸ் டிராவில் 10 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை வென்ற அதிர்ஷ்டசாலி..!

Mahzooz-

புகழ்பெற்ற மஹ்சூஸ் டிராவின் 27 வது டிராவில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோலண்ட் என்பவர் 10 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றிருக்கிறார். மொத்தமுள்ள 6 எண்களில் 5 எண்களை சரியாக குறிப்பிட்ட இரண்டு அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு இரண்டாம் பரிசுத் தொகையான 2 மில்லியன் திர்ஹம்ஸ் பிரித்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

துபாயில் உள்ள கேக் ஷாப் ஒன்றில் டெலிவரி டிரைவராக பணிபுரியும் ரோலண்ட் கடந்த 10 வருடகாலமாக துபாயில் வசித்துவருகிறார். இவரது வாழ்க்கையை ஒரே இரவில் மஹ்சூஸ் டிரா மாற்றியமைத்திருக்கிறது.

roland

இதுகுறித்துப் பேசிய 38 வயதான ரோலண்ட்,” பரிசு குறித்து அறிவித்தவுடன் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. எனக்குப் படபடப்பாக வந்தது. அடுத்தநாள் எனது ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். துபாய் வந்ததில் இருந்து இந்தப் போட்டியில் பங்கேற்று வருகிறேன். இந்தத் தொகையைக் கொண்டு எனது காதலியைக் கரம் பிடிப்பேன். வெகுநாட்களாக நாங்கள் இதுகுறித்துப் பேசிவருகிறோம். இப்போது எங்களால் குடும்பத்தை சிரமமின்றி நடத்தமுடியும்” என்றார்.

தனது சொந்த ஊரில் வீடு ஒன்றினைக் கட்டவேண்டும் எனத் தெரிவித்த ரோலண்ட்,” அது எனது அம்மாவின் கனவு. இறுதியில் அது நிறைவேறியிருக்கிறது. என்னை படிக்கவைத்து துபாய்க்கு வர பெரிதும் உதவிய எனது அண்ணனுக்கு இந்தப் பரிசுத் தொகையின் மூலமாக உதவி செய்ய இருக்கிறேன். உங்களுடைய முயற்சிகள் சில நேரங்களில் தோற்கலாம். ஆனால் முயற்சிப்பதில் தோற்கக்கூடாது. நிச்சயம் நமது நம்பிக்கை ஒரு நாள் வெல்லும்” என ரோலண்ட் உற்சாகமாகத் தெரிவித்தார்.

எமிராட்டி ஒருவரும் இந்தப் போட்டியில் ஒரு மில்லியன் திர்ஹம்ஸ் பணத்தைப் பரிசாக வென்றிருக்கிறார்.

Mahzooz-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap